அவள் ஆடை பறக்க விட்டு ,
அளவாய் அவளுக்கு கோபம் மூட்டுகிறாய் . . .
அவளுக்கு அளவாய் ,
எனக்கு அளவுக்கதிகமாய் . . .
வச்சிக்கிறேண்டா வருண பகவான்,
ஒரு நாள் உன்னை . . .
**************************************************
உன் அரவணைப்பில்
என்னுயிர் நீர்த்துவிடும்
ஆசையில்லை எனக்கு . .
போகும் இடத்தில்உனை போல்,
புதையல் கிடைக்கா தென்பதை அறிவேன் . . .

அவள் தலை சாய்த்து
தூங்கு வதற்கென்றே,
கடினமான என் மார்பகத்தை
மிருதுவாக்கி கொண்டேன் . . .
**************************************************
இரு நிமிட இடைவெளியின் - அந்த
அறுபது நொடிகளிலும் வந்து போகும்
ஆறாயிரம் நினைவுகளில்,
ஒன்றில் கூட உன் முகம்
இல்லாமல் இல்லை . . .

பெற்றவளை பிரிகையில்
சிரிப்புடனும்,
உற்ற எனை பிரிகையில்
அழுகையுடனும்
அவள் விடை பெறுவது . . .
எனக்கு மட்டுமே வாயக்கப்பெற்ற பேறு . . .
**************************************************
கை அசைத்து பிரிந்து செல்கயில் . . .
அசைவுகள் இருப்பதாய் நினைத்து
கொண்டு நீ . . .
அசைவற்று உன் கை
நிற்பதை கண்டு,
போகாமல் நில்
என்பதாய் எனக்கு . . .
**************************************************
அத்தனை பாவனைகளும்
அத்துப்படி எனக்கு - தனித்தனியே
கண்ணீருடன் சிரித்து கொண்டு,
கவலை சற்றே மறைத்து கொள்ளும்
திறமை மட்டும் கற்று கொடு எனக்கு . . .
உன்னிடம் காண்பிக்க அல்ல - உன்
கவலையை புரிந்து கொள்ள . . .
**************************************************
காயங்களை மறைத்து கொண்டு - எனக்காய்
கணம் தோறும் மலர்ச்சியுடன் அவள் . . .
மலர்ச்சியில் மறைந்து கிடக்கும்
மர்மங்கள் அறிந்தும்,
அவிழ்த்து அவளை
அழவைக்க விரும்பாமல் நான் . . .