Monday, December 24, 2012

தாய்மை எனப்படுவது யாதெனில் ? என் தாய் என்பேன் !!!!!!!!!!!!!!!!






(MY MOM)                                                                                            (MY GRANDMA)


தலைச்சனா பொறந்த புள்ள 
      பேரு சொல்ல வந்திருச்சி
தங்கமா எண்ணினாரோ முத்துசாமி 
      அம்பலம் தான்!

ஒத்தைமகளா உன்னை நெனச்சி 
      உசுர வச்ச சரஸ்வதியும் 
பெத்த மவஇப்ப என்னை 
      பெத்தவளா ஆயிட்டியே!

பேருசொல்ல ஒத்தப்புள்ள 
      வேணுமுன்னு நெனச்சதில்ல,
ஊருமெச்ச வாழத்தான் பொண்ணு மூணு  
      பெத்தெடுத்த!!

குலம் தழைக்க ஒத்தமவன் பொறக்க 
      எண்ணி நீ பட்டதெல்லாம்,
நார்  படுமா?  ஆற்றின் கீழ் வேர்  படுமா?
      நாற்றங்கால் சேர் படுமா ? ? 

கல்லையும் கும்பிட்ட, புள்ளையும் கும்பிட்ட,
      கரிசல்நில மண்ணையும் கும்பிட்ட!

கடவுளுன்னு சொன்னதால 
      காளையையும் கும்பிட்ட 
மஞ்ச துணி கட்டினதால  
     மரத்தையும் கும்பிட்ட!


அந்த கோயில் போய்வான்னு  
     அடுத்த ஊர் ஆச்சி சொல்ல,
அடுத்த நாளே வண்டிகட்டி
     அந்த கோயில் போய்வந்த,

இந்த கோயில் போய்வான்னு
       எடச்சி ஒருத்தி சேதி சொல்ல,
 எள்ளலவும் யோசிக்கல
       ஏன் எதுக்குன்னு கேக்கவும் இல்ல


பழநியில தேரிழுக்க
    பாட்டியும் தான் வேண்டிக்கிச்சி 
மாலை போட்டு மலைக்கு வர
    மாமாவும் வேண்டிக்கிச்சி

தானம் தர்மமெல்லாம்
    தட புடலா செஞ்சிவச்ச 
தங்க, தொட்டி கட்டி
    தாலோ பாட ஆச வச்ச!
       
கார்த்திகையும் பொறந்துடுச்சி,
    கனியும் நேரம் வந்துடுச்சி 
இடுப்பு வலி எடுத்துடுச்சி,
    இரவெல்லாம் வெளுத்துடுச்சி!

உத்தமியே உன் மகனா  
     பூமியிலே பொறப் பெடுக்க
 கருவாக உருமாறி
     கார்த்திகை 2ல் கண் முழிச்சன்,

என்ன தவம் செஞ்சேனோ
   இப்படி ஓர் பொறப்பெடுக்க?

புண்ணியந்தான் செஞ்சேனோ  
  உந்தன் மடி நான் கிடக்க?
         
குலசாமி கை விடல 
   கும்பிட்ட எதுவும் வீண் போகல... 

கடைசி வர கூட வா ன்னு  
   கடவுள தான் கேட்டிருந்தேன்,
கடவுளா நீ கெடச்ச பின்னே 
  கால் பதிச்சேன் பூமியிலே  

குலம் தழைக்க ஒரு மவந்தான் 
    போறந்துட்டானு நீ அழுத....

கடவுள் நீ கெடச்சதால கண்ணீரின்றி 
           நான் அழுதேன். .  . . . 

Tuesday, August 28, 2012

மாதர் தன் மனக்குமுறல்..




ஒரு பெண்ணின் ஏக்கம்தனை(Despondency) என் கவிதையின் வாயிலாக தெரியபடுத்த எடுத்த முயற்சியின் தொடக்க கிறுக்கல் இது .....,

                      மாந்தர் தன் மனக்குமுறல்..




எதையும் ஆசைபட்டதுமில்லை  - அதற்காக 
                எனை எவையும் ஆசைபடவிட்டதுமில்லை ...
தெரிந்த பின் மறையலாம் இயல்பு - 
                நினைக்கும்போதே மறைந்தால் அதில் எது என் தவறு ?!!

பழையதாயினும் பொருத்தமான வரிகள் ,
                "உப்பு விற்க போனேன்அடை மழை"
                "மாவு விற்க போனேன்அசுர காற்று"
அது ஐப்பசியுமல்ல ஆடியுமல்ல - என் 
                வாழ்வின் அத்தனை நாட்களுமே !!

சிறகுகள் இருக்கும் பறக்க இயலாது !
                காலிரெண்டிருக்கும் கடக்க இயலாது !
மடிகள் இருக்கும் மயங்க இயலாது !
                கைகளிருக்கும் அணைக்க இயலாது !
அத்தனை இருந்தும் ஏற்க இயலாது - ஏற்றவை 
                யாவும் விரும்பியதல்லாது ................!!

காலங்கள் கைவிட்டது,
                கண்ணீர் துடைக்கும் கைகளும் கைகழுவிவிட்டது ,
சொந்தங்கள் போயே விட்டது,
                சொத்தும் என் சுகங்களும் சொதப்பலிலிட்டது....!

காதலன் உள்ளான் கண்ணீர் துடைக்க - என் 
                ஆடவன் உள்ளான் அல்லலை நீக்க,
உற்றவன் உள்ளான் உணர்வினை விளக்க - என் 
                உரிமையானவன் உள்ளான் உண்மையாய் இருக்க...
என்றென்னியிருந்த காலமதுவும் - கானல் 
                நீராய் மறைந்தது ஏனோ ?
துளையில்லா குழலாய் நான் 
                கூவினால் கேட்பது யாரோ??????

பிறப்பை தேர்ந்தெடுக்கவில்லை,
                பெற்றோரையும் தேர்ந்தெடுக்கவில்லை,
வாழ்வை தேர்ந்தெடுக்கவில்லை,
                வாழும் முறையையும் தேர்ந்தெடுக்கவில்லை, 
சாவை மட்டும் விரும்பி ஏற்கிறேன் !!!

ஆலையில் அகப்பட்ட கரும்பாய் !
                சேற்றில் சிதையுண்ட மீனாய் !
கிழிந்து தொங்கிய கீற்றாய் ! - இனியும் 
                வாழ என்னால் முடியவில்லை!!!!!

இதோ ,
 இல்லாத ஓர் உலகம் இருக்கும் - அங்கே 
          எனக்கும் நல்லதொரு இடமிருக்கும் என்ற எண்ணத்தில் .... 
போகிறேன் !!

என் வரிசையில் நிற்கும் பெண்களின் 
                கடைசியாள் நானாக இருக்கட்டும் ...... கடவுளே !!!!!!!!!!

Friday, August 3, 2012

எப்பொழுது ??








எப்பொழுது காதல் கொண்டேன் ?

தூரத்தில் ஒளியாய் நீ 
             தெரிந்த போதா?
தூரல் உன்மேல் தூவி 
                பார்த்த போதா ?

அதிர்ஷ்ட துளிகளில் ஓரிரண்டு - உன்
      அங்கம் தொட்டு தங்கமானபோதா ?
இல்லை
ஆடை நனைய ஓடி வந்தாயே அப்பொழுதா?

எப்பொழுது காதல் கொண்டேன் ?

அலுவலகம் வந்து 
      அருகில் அமர்ந்து - திரும்பி
 பார்த்து நான் 
         திகைத்த போதா?

புதிதாய் வந்தவள் 
        நான்தான் என்று
புதிராய் எனைப்பார்த்து 
        புன்னகைத்த போதா?

உன் பெயரை நான் கேட்க,
     என் பெயரை மறந்து நின்று,
முதல் பார்வையிலேயே 
     முக்தி அடைந்தேனேஅப்பொழுதா?

எப்பொழுது காதல் கொண்டேன் ?

அழகாய் சிரித்து 
     அஹிம்சையாய் நகம் கடித்தாயே!
விரல்களால் கன்னம் தடவி 
       மெல்லிய இசை இசைத்தாயே!

காதோரம் ஒற்றை முடியை 
       காற்றுகள் வம்பிழுக்க
இலகுவாய் இழுத்ததனை
       காதிடையில்  வைத்தாயே !

நான் தீண்ட எத்தனிக்கும் 
    உன் கார் கூந்தலினை
காற்றின்  கரம் தழுவவும்
      கவிதையாய் கோபம் வந்ததேஅப்பொழுதா?

எப்பொழுது காதல் கொண்டேன் ?

கழுத்தோடு காதல் கொண்ட 
      பாசியதை விரலெடுத்து ,
குவளை மலர் இதழினிடையே 
      குறுக்காக அதை நிறுத்தி 
முல்லை பூ பற்கள் கொண்டு 
      வலிக்காமல் கடிப்பாயேஅப்பொழுதா ?

       அப்பொழுதோஇப்பொழுதோ?  இல்லை அவ்வப்போழுதோ?

எப்பொழுதானால் என்ன !

முப்பொழுதும் உன் கற்பனையோடு கரையும் பொது !!!!!!

Friday, July 13, 2012

விலைமகளாய் ! ! !





உருக உருக உதட்டோரம் வைத்து காதலிக்கபட்ட
                                                   நான்,
                                உறவு முடிந்ததும் மிதித்து தள்ளப்பட்டேன்...
                                               

                                                                                          






Tuesday, July 3, 2012

என் இனிய அவள் !



என் இனிய அவள் !




நெய்தல் நிலம் பட்ட கதிர்
நீருரிஞ்சி தாகம் தீர்க்க - கொண்ட 
நீர் பெருகிப்பெரும் வெள்ளமாய் 
விரிந்து காண - கார்மேகம் 
உருவாகி கரும்படலமென திரண்டு விழ 
என்னவளின் கூந்தல்தனை நான்
வேறென்ன சொல்லிமாள !!!!

வான் மணந்த வஞ்சியது - வளர்ந்த 
போது சிரித்த முகம் 
தேனிலவு தேயும்போது 
தேம்பியழுது துடைத்த முகம் .....


மழை கொண்ட மேகமது 
                கதிரவனை கையால் மறைத்து
கதிர்வீச்சை தன்னுள் இழுத்து 
                சாரல் வைத்து சற்றே இடை நிறுத்தி 
வர்ணம் ஏழையும் வகைவகையாய் பிரித்து 
                ஒற்றை கணையாய் உருவகித்த 
வில்லோ உனது விழி கொண்ட புருவம் !!!!!


ஆற்றிலே பிறந்து - செம்மண் 
சேற்றிலே வளர்ந்து 
காற்றால் ஈரல் நிரப்பி 
செதிலால் சுவாசம் கொள்ளும் 
செம்மீன் இரண்டும் கொண்ட 
கயல்விழி அவள் விழி ...

ஊர் சுற்றி ,உலகம் சுற்றி 
பாரில் பல காடு சுற்றி 
பசுஞ்சோலை பலவும் சுற்றி 
பனிகாற்று பூவையும் சுற்றி 
தேன் கொணர தேடும் வண்டு 
தேனினுமினிய இதழ் கண்டு 
தேனெடுக்க எத்தனிக்க - இதழ் 
இருகோணம் பிரிய கண்டு 
புன்னகை என்றறியா பேதை வண்டு 
மனமயங்கி மண்ணில் விழ 
என் சொல்லி நான் மலைப்பேன் 
இனிய அவள் இதழ் கண்டு ....


காவியமொன்றில் கண்டேனதை - கலைஞன் 
கவிஞனாய் கரைபுரட்டிய வரிகள்...
தலைவன் தனை பிரிந்து போக 
தலைவியவள் துயரில் ஆழ 
அணையில்லா ஆறாய் மாறி - அவள் 
விட்ட கண் நீருமது 
"மலையேறி மடுவில் விழுந்தது" - உருவகமோ 
உள்ள கிளர்ச்சி கொள்ள 
பெண் திமிரை மலையெனக் 
கண்ட கவிஞன் வரியே அதற்கு சாட்சி...!

வனம் கொண்ட சோலையோன்றில் - வண்டின் 
வருகை யெதிர்நோக்கி நிற்கும் 
தேன் குருதி கொண்ட செண்டு - தாங்கும் 
ஒற்றை காலிலாடி நிற்க 
பருவமதை தடவி செல்ல - விரிய 
துடிக்கும் வென்மொட்டு சாரை 
புது பருவமங்கை பல் வரிசை .....


பளிங்கு கல்லை பக்குவமாயெடுத்து 
பன்னீர் நனைத்த பட்டிலே துடைத்து 
வைரவாய் கொண்ட உளியிலேயுடைத்து
வர்ணமுலாம் தட்டிலே வைத்து 
அளவு வைத்து அளந்து பார்த்து
அதயதை அங்கே பொருத்தி 
செதுக்கியெடுத்த சிற்பமென - செங்கதிர் 
மேனியதை சொல்வேனோவேறொன்றும் !!




Monday, July 2, 2012

ஆட்டோகிராப் (Autograph)


ஆட்டோகிராப் (Autograph)
அலைமோதியது கூட்டம்,
          அடித்து கொண்டனர் கையெழுதிற்கு....




பழுதாகி போன பேருந்தில் பயணிகள் ......




Wednesday, June 20, 2012

வரமானவள் !!!!!!!


என் தங்கைக்காக தொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு சரம் - அது 
என் கையால் தொடுக்கப்பட்டது எனக்கு கிடைத்த வரம் ......................
       


 வரமானவள் !!!!!!!


தாய் தந்த பரிசாக
  எனக்கு கிடைத்த வரமாக,
முன் பின் பிறந்தாள் தமக்கையாய்
  அன்பில் என்றும் அன்னையாய்.....

கண் திறந்து காலம் முதலாய் 
   கரம் பிடித்து நாட்கள் தொடர்ந்து
ஓடி விளையாடிய நாட்களும்,
   கூடி கொண்டாடிய இடங்களும்

மரணம் தீண்டும் வரை
       மனதினில் நிற்கும்,
மறு ஜென்ம வேளையிலும்
    மறக்காமல் இருக்கும்.  
     
பங்கிட்டு உண்கையில்  மட்டும்
      பகைவராய் இருவரும் அவ்வயதில்..

அளவாய் சண்டையிட்டதும்,
   அளவுக்கதிகமாக அன்பு வைத்ததும் 
உன்னிடம் மட்டுமே!

நெய் முறுக்கோ, நிலக்கடலையோ 
   இலந்தை வத்தலோ, ஈச்சம்பழமோ 
பகிர்ந்து தானே உண்பாய் - எப்படி
       பாசம் அதிகம் கலப்பாய்!

வளர்ந்த நாட்களிலும்,
       வாழ்ந்த காலங்களிலும் 
பக்க துணையாய் நீயே,
  பாசத்தில் நீ என் தாயே!

பகிர்ந்துண்டு உண்பதிலும் 
 பாசம் காட்டி வாழ்ந்ததிலும் 
பெற்றவளின் நிகர் நீயே 
  மற்றெல்லாம் வெறும் மாயே 


தங்கமும் மதிப்பில்லை என்
       தமக்கைக்கு முன்னால்,
தாமரையும் அழகில்லை என்
      தாரகைக்கு முன்னால்....

தவம் செய்யாமல் கிடைத்த 
   வரம் நீ எனக்கு......!