அண்டத்தின் அப்பன்
ஆதவன் அனல லைகளால்
அகிலத்தின் அரசிகள்
ஏரி கடல் ஆறு புனலோடு
காம கதிர்கள் கொண்டு
களியாட்டம் அதன்மேல் ஆடி
காம கதிர்கள் கொண்டு
களியாட்டம் அதன்மேல் ஆடி
காம கதிர்கள் கொண்டு
களியாட்டம் அதன்மேல் ஆடி
கருவுற செய்து வானில்
கருநீல கருவறை அமைத்து
குறுமாக்கள் உருவாக்கி
குட்டி குட்டியாய் பெற்றெடுத்து
தவழ்ந்தாட அனுப்புகிறான்
தரணிக்கு தொடர்ச்சியாய்
கெடுத்ததில்லை இதுவரை
கொடுப்பவரே வெய்யோன் மக்கள்
கர்ணன் மட்டுமன்றி
கார்மேக துளிகளும் தான்
அள்ளி கொடுப்பதில்
அவர்களுக்கும் தான் ஈடுண்டோ ?
குறிஞ்சி குன்றுகளில் ஏறி
குதித்தாடும் அருவியாய் ஆட
முல்லை மலர்களில் மறைந்து
ஒளிந்தாடும் ஓடையை ஓட
மருத மண்ணில் விழுந்து
மின்னும் மணிகளாய் மாற
நெய்தலோடு நிறுத்தி கொண்ட
நிலைப்பாடு தான் என்னவோ
பார்க்காத இடங்கள் எல்லாம்
பாலையாய் மாறி தான் போனதோ
வஞ்சனை இன்றி
வந்து போகும் அன்னையே
வணங்குவோம் எங்களை
வாழவைக்கும் உன்னையே



