Monday, August 10, 2015

சலசலக்கும் ஸ்வரங்கள் . . .



என்னவள் : ஹாய் டா , குட் மார்னிங் :) எழுந்துட்டியா ?
அவளின் நான் : 
பூத்திருக்க காத்திருந்த 
        பொன் மொட்டொன்று,
புலர்ந்த நேர காற்றிடம் 
        காலை வணக்கம் சொல்லியதோ . . ! !    
           
என்னவள் :  காலை லையே  கவிதையா ? Mmm  நல்ல இருக்கு :) என்ன பண்ற ?
அவளின் நான் :
உளியின் வேலை 
         உருவம் கொடுப்ப தெனில் !
உன்னவன் வேலை
         உன்னை நினைப்பது மட்டும் தானே !!!    
      
என்னவள் : பொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்  . . . சரியான fraud da நீ  . . . 
              ஆமா  . . நெஜமாவே என்ன தான் நெனச்சிகிட்டிருந்தியா ?????
அவளின் நான் :
உதிக்கும் ஆதவன் உண்மையாயின்  . . .
       உச்சி கொண்ட மாமலை உண்மையாயின்  . . .
உதிரும் செண்டுகள் உண்மையாயின்  . . .
      ஊரும் எறும்புகள் உண்மையாயின்  . . .
உனக்காய் உதிர்த்த வார்த்தைகள் 
   பொய்யாய் எப்படி போகும் அன்பே ???

என்னவள் : என்னமோ ! உன்ன நம்புறேன்  . .  பார்போம் . .  அப்புறம் சாப்டியா ?
அவளின் நான் :
படைத்தவனுக்கு படைத்துவிட்டு 
        படைத்ததில் மீதியை 
பகிர்ந்துண்ணுவது தானே
    பக்தியாளனுக்கு தர்மம் . . . 
நீ உண்பதில் என்
    உயிர் வாழும் போது 
  நான் வேறு தனியாய் எதற்கு  . . .

என்னவள் : oiiiiiiii  . . .  lines lam நல்லா தான் இருக்கு . . but ஒழுங்கா போய் சாப்பிடு. . 
நான் சாப்டேன் pa  . . இப்ப தான் . .  idly . . .
அவளின் நான் : 
கண் பார்த்து, கரம் தொட்டு 
    இதழ் தடவி, ஈரக்கொலையில் இறங்கி
இதமான அவள் இதயமருகில் 
    நழுவி சென்ற இட்லியே 
இருந்திருக்கலாம் உனை போலாவது  . . .

என்னவள் : எப்பா சாமி . .  மொதல்ல நீ சாப்டு அப்புறம் முழாம் பூசலாம்  . . . அதுவரை நான் reply பண்ண மாட்டேன்  . . . 
அவளின் நான் :
கைப்பிடி சோறும், கால் கரண்டி குழம்பும் 
    சிறு கிண்ண கூட்டும், சிக்கி தவிக்கையில் 
செவந்தவள் உன் முகம் சிந்தையில் ஓடிட 
    சிறிது நேரத்திலேயே சில கவளம் உள் போயிற்று . . . 

என்னவள் : செம கட்டு கட்டிருக்க .. . .mmm  . . .இதுல build up வேற சாப்ட முடியலன்னு . . 
சரி , நேத்து night dp வச்சானே , எப்புடி இருந்துச்சுனு நீ சொல்லவே இல்ல . . .??
அவளின் நான் : 
நயமான இரவு அது , 
    நாணல் கொஞ்சும் காற்றும் வேறு ,
மிதமான  இரைச்சல் கொஞ்சம் 
    மேகம் தெரியும் வெளிச்சம் அதில் 
பளிச்சிடும் பொன்னிலா தெரிந்தால்  . . . !!!!!  ???

என்னவள் : அப்போ நான் நிலா மாதிரி இருந்தேனா ?
அவளின் நான் :
படைக்கப்பட்ட யாவும் 
          அழகென நினைத்தேன் 
பாவை உன்னை 
         பார்க்கும் முன் வரையே . . .
பால் நிலா கூட
        பாதி அழகே - உன் 
பவள விழி சற்று 
         சுருங்கிட கண்டால் . . . 

என்னவள் : வார்த்தைகள் லாம் நல்ல இருக்குடா  . . . .  .  
அவளின் நான் : 
வார்த்தைகள் ரசிக்கும் வஞ்சியே  - நான்
          வர்ணித்த அழகை ரசித்தது போதும் 
அழகிய அவளை ரசிப்பாயானால் 
           அப்படியே நிற்ப்பாய் அவளழகில் மயங்கி . . . 

என்னவள் : இது யார சொல்ற ? என்னை தானே . . அதானே வேற யாரையாவது சொல்லி பாரு . . மவனே , கொன்றுவேன் உன்னை  . . .

அவளின் நான் :
கண் சிமிட்டி மின் இயற்றி எரியவிட்டா ?
      கார்கூந்தல் கயிறு கட்டி தொங்க விட்டா ?
மார்பில் அணைத்து மோகத்தில் எனை மூர்ச்சையாக்கியா?
     மருதாணி இடையில் எனை மயங்கவிட்டா ?

எப்படி நீ கொன்றாலும்  , எனக்கு சொர்க்கம் தான்  . . .

(அடுத்த காலம்  . . . . . )

என்னவள் : ஒரே இருமலா இருக்கு . . போகவே மாட்டுது . . . 
அவளின் நான் : 
ஆசைபட்டு ஆட்கொண்டது போலும்,
               அப்படியே விட்டு விடாதே செல்லமே  . . . 
  பழகிவிட்டால்  உன்னை
           விலகிபோகாது எவையும் இங்கே . . .
என்னைப் போலவே . . . . .

என்னவள் : உடம்பு சரி இல்லைன்னு சொன்னா , அதுக்கும் கவிதையா ??? போடா !!
அவளின் நான் : 
இருமலிலும் இசை
  கோர்ப்பவள் நீ !!
தோடி ராகமும் தோற்று போகும்
          நீ  தும்மினால்  . . 

(சிறிது நேரத்திற்குப் பின்  . . . . )

என்னவள் : saree கட்டி எடுத்தேன் photo . . .எப்டி இருக்குனு சொல்லு 
அவளின் நான் :
மலர்களால் கூட 
          மாராப்பு வேண்டாம் ,
மென்மை அறிந்திட 
          அழுத்தி பார்க்கும் அவைகளும் . . . 
மாற்றிப்பார் எனை உன் மாராப்பாய் 
          தென்றலையும் தீண்ட அனுமதியேன் . . .

என்னவள் : உத வாங்க போற நீ . .
அவளின் நான் : 
உதைப்பது உன்
    கால் தான் எனில்,
உடுத்த போவதில்லை
    உடம்பில் எதையும் . . .
துணி பட்டு உன் கால் 
    அடி பட்டு போக கூடும் . . .

என்னவள் :போதும் டா  . . . . எனக்கு வெக்கம் வெக்கமா வருது  . . . 
அவளின் நான் :
சிந்திய சிரிப்பின் ஊடே
                சிதறா  வெக்கம் மலர,
சிரம் நீ தாழ்த்திய நொடியில்
                சிவந்தது மண்ணும் கண்டு. . .
வஞ்சனை எதற்கு பெண்ணே
               வானமும் ரசிக்கட்டும் அதனை,
உயர்த்திடு சற்று உன் முகத்தை
            உயிர் பெற வேண்டும் யாவும் . . .

என்னவள் : என்னை நெனச்சி தான் எல்லாம் எழுதுறியா உண்மையாவே ?
அவளின் நான் : 
எழுதிய வரிகள் யாவும் 
                 உனக்காக மட்டுமே ஜனித்தவை . . . 
வரிசையில் இன்னும் அதிகம் 
                  வரத்திற்கு நிற்பதை காண்பாய் . . .

வாசித்து அனுப்பி வை விரைவாய்  . . .


(தொடரும் இச் சலசலப்பு   . . .)