Wednesday, April 22, 2015

தலை தாழ்த்திய பூ . . . நாணமோ ?



சிந்திய சிரிப்பின் ஊடே
         சிதறா  வெட்கம் மலர,
சிரம் நீ தாழ்த்திய நொடியில்
        சிவந்தது மண்ணும் கண்டு. . .
வஞ்சனை எதற்கு பெண்ணே
      வானமும் ரசிக்கட்டும் அதனை,
உயர்த்திடு சற்று உன் முகத்தை
    உயிர் பெற வேண்டும் யாவும் . . 


Sunday, April 19, 2015

சாதித்தாய் துளியே ! ! !



பால் பிறை பவள நெற்றியின் 
   பதுங்கு துளையில் பொங்கி முளைத்திடும்,
ஒன்று, இரண்டுஒன்பது, நூறும் 
   ஒன்றாய் திரண்டு, நின்றது துளியாய். . . 

கோர்த்து அணைத்து கூடிய துளிகள் 
   கொஞ்சி பேசி நகர்ந்தது மெதுவாய்
பொட்டின் சாயம் கொஞ்சம் பூசி 
  பெயர்ந்தது இரண்டு புருவங்க ளிடையே. . . 

மூக்கின் சறுக்கில் அடியடியாய் இறங்கி 
   முன்பார்த்த நுனியை தொட்டதும் போதும் . . .

கானா எதையோ கண்டது அங்கு 
  கனலை கொண்ட பழத்தினைப்  போல. . 
குழைத்து வார்த்த குங்கும உதட்டை 
  தொட்டு பார்க்க கைகளை நீட்ட  . . .

அதிர்ந்த வேகத்தில் அடுத்த நொடியே
  பக்கவாட்டில் துளி, பாய்ந்து இறங்கிட
அதிர்ஷ்டமில்லா வியர்வை இறுதியில் 
 அவள் கன்னம் வருடி கரைந்தோடியது . . .

கோபத்தில் வேகத்தை கூட்டிய துளியோ 
   கோரமாய் முன்னேறி குரல்வளை தொட்டது 
ஏற்கமுடியா எண்ணக்குலைவில் 
   தவிர்க்கமுடியா தற்கொலை முடிவோடு  . . .

தொண்டைக்குழி தாண்டிக் குதித்து,
   தொப்பென விழுந்தது சீண்டா மலர்களிலே . . 

சிறுதிடர் கடந்து சிவந்த முகட்டின் 
          காம்பின் விளிம்பினில் கரங்கள் விரித்து
சிரம் அதை தாழ்த்தி சீராய் கீழ் பாய்கையில் 
        சிந்து மலரின் சிலையிடை கண்டது,. . . .

மலரின் நடுவினில் சிறு மடுவையும்  ரசித்தது . . . 

இறந்தோம் என்று எண்ணிய போது 
    இடைப்பட்ட தொடையில் வழுக்கி விழுகையில்
போதும் எனது பிறப்பின் பயனென  - அவள் 
   பாதம் தொட்டு பயணத்தை முடித்தது . . .

சற்று முன்பு முளைத்தாலும் 
 சாதித்துவிட்டது வியர்வை துளி  . . .