Friday, March 28, 2014

வித்தகி . . .









ஒரே செடியில் தான் மலர்ந்தது 
      ஒரே நாரில் தான் தொடுக்கப்பட்டது !

ஒரே கூடையில் தான் அமர்ந்து சென்றது 
        ஒரே கையால் தான் அளக்கவும் பெற்றது !

ஒரே இலைக்குள் தான் சுருடவும் பட்டது 
       ஒருவனிடம் தான் விலையும் போனது  . . .! 

முதல் இரண்டு முழம் சாமிக்கும் 
          அடுத்த இரண்டு முழம் மனைவிக்கும் என 
முறையாய் தான் முழம் அளந்தும் அளிக்கப்பட்டது . . .

அப்படி இருக்க !

ஒரு சேர பக்தியையும் , காதலையும் பரிவர்த்தனை செய்ய . . .
எப்படி முடிந்தது மல்லிகையால் ?







Thursday, March 20, 2014

நிறை . . .




கட்டி அணைத்து, கால்கள் பிண்ணி 
       கழுத்தை கவ்வி, மார்பால் மோதி 

இடையை வருடி, இதழை ருசித்து 
     ஈரப்படுத்திவியர்வையில் குளித்தும் 

   முற்று பெறா என் காதல்  . . . !

விரல் எடுத்து, வெட்கம் குழைத்து 
   இதழ் நிறுத்தி , இதமாய் என் கையில் 

அவள் கொடுத்த ஓர் 

     முத்தத்தில் முற்று பெற்றது ! ! ! !

Monday, March 17, 2014

முதிர்க்கன்னி




கருப்பு கவர்வதுஉம் 
                வெள்ளை விளக்குவதுஉம் 
கால அறிவியலின் 
                கணக்குப்படி தான் எனில் . . . 

கருப்பாய் இருந்தும் (இருப்பதால்அவள் 

                கவரமுடியாமல் போனதெப்படி ?