நீயும் பெண்தானே!!!!!!!!!!!!!
என்கவி உரிமை
உனக்கே என்றேன்,
தலைப்பாய் உனை தரவும்
தயங்கி நின்றாய் . . . !
உரிமையோடு என்னுள்
ஊடுருவு என்றேன்,
தொடுவதும் கூட உனை
தீட்டு என்றாய் . . . !
பார்த்தால் போதும்
பசியாருவேன் என்றேன்,
பசித்திரு உன்னால்
பயனில்லை என்றாய் . . . !
நிழல் தீண்டல் போதும்
உயிர்ப்பேன் என்றேன்,
உறவாட உன்னோடு
முடியாது என்றாய். . .!
தொடர்வரிகளாய் தொடரும்
என் காதல் என்றேன்,
முற்றுப்புள்ளி வைத்து
முடித்துகொள் என்றாய் . . . !
என்னுயிர் வேண்டுமா
எடுத்துக்கொள் என்றேன்,
உயிரால் என்ன முடியும்
உலகில் என்றாய் . . . !
கவி, காதல், உயிர், உரிமை
உண்மையே!
என்னோடு நீ இல்லையேல்,
உனக்கே என்றேன்,
தலைப்பாய் உனை தரவும்
தயங்கி நின்றாய் . . . !
உரிமையோடு என்னுள்
ஊடுருவு என்றேன்,
தொடுவதும் கூட உனை
தீட்டு என்றாய் . . . !
பார்த்தால் போதும்
பசியாருவேன் என்றேன்,
பசித்திரு உன்னால்
பயனில்லை என்றாய் . . . !
நிழல் தீண்டல் போதும்
உயிர்ப்பேன் என்றேன்,
உறவாட உன்னோடு
முடியாது என்றாய். . .!
தொடர்வரிகளாய் தொடரும்
என் காதல் என்றேன்,
முற்றுப்புள்ளி வைத்து
முடித்துகொள் என்றாய் . . . !
என்னுயிர் வேண்டுமா
எடுத்துக்கொள் என்றேன்,
உயிரால் என்ன முடியும்
உலகில் என்றாய் . . . !
கவி, காதல், உயிர், உரிமை
உண்மையே!
என்னோடு நீ இல்லையேல்,
எதுவும் இனி என்னில் இல்லையே!

No comments:
Post a Comment