அடித்தது வலிக்கவில்லயாயினும் - அம்மா
அடித்தால்
அழுகை வருவதெப்படி ?
கடித்ததில் எச்சில் இருந்தும் - அக்கா
கண்டுக்காமல் வாங்கி
தின்பதெப்படி ?
மிதித்தது பெரிய கோழியாயினும் - குஞ்சு
மிரளாமல் அங்கேயே
சுற்றுவதெப்படி ?
உழைப்பவன் உழைத்து ஓடாய் தேய - ஒன்றுமறியா
ஊதாரிக்கு
அதிர்ஷ்டம் அடிப்பதெப்படி ?
காதல் பிறந்ததும் காதலர் யாவரும் - திடீர்
கவிஞராய்
மாறுவது எப்படி ?
பட்ட காலிலே மறுபடியும் - காயம்
பட்டு பட்டு ஆருவதெப்படி?
கெட்ட குடிகளே எப்பொழுதும் - ஊரில்
கெட்டு
ஒழிவதுவும் எப்படி ?
கைப்பிடி தந்த மரத்தையே கோடாரி - வேரோடு
சாய்க்க முயல்வது எப்படி
?
நாள் முழுதும் உழைத்திட்ட ஒருவன்
நாணலில் கவலையின்றி உறங்குவதெப்படி
?
கண் மயங்கி தூங்கியும் பேருந்தில்
- ஊர்
காணாமலே கண் முழிப்பதெப்படி
?
உதவ முடிந்த சக்தி இருந்தும்
- சொந்தம்
கதவை மூடும் கண்ணியம்
எப்படி ?
ஊர், பேர், இனம் அறியா நட்பு
- உயிரில்
இரண்டற கலந்து வளருதே
எப்படி ?
முறை மாமன் சொந்தமிருக்க - காதல்
முரணான சாதிப்பையனோடு
வருவதெப்படி?
சில நாள் பழகி சிறகொடிந்த காதலுக்கு
- விலையற்ற
உயிர் கொடுக்க
துணிவதெப்படி ?
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே - சொன்னவள்
எவனோ ஒருவனோடு, மகிழ்ச்சியாய் எப்படி ?
மணமுடிந்த பத்தாம் மாதத்தில் - மழலை
ஒன்றை அவள் பெறுவதுவும் எப்படி ?
போகிற போக்கில் அவள் பார்வையில்பட்டால்
விழிநீர் பொங்கி வழிவதுவும்
எப்படி ?
பதினாறு பொருத்தமும் பொருந்தியும்
- சிலருள்
வாழ்க்கை பொருந்தா இரகசியம்
எப்படி ?
படிப்பும் அறிவும் மிகுதியாய் இருக்க -
பணம்
படைதவர்கிடையே மட்டும் மணவிலக்கெப்படி
?
எந்த குற்றமும் அறியா பிஞ்சுகள் -
சிறு சுற்றமும்
இன்றி அனாதையாய் எப்படி
?
தோளில் மார்பில் தாங்கிய பிள்ளைகள்
- பெற்றோரை
நடுவில் தொலைப்பது எப்படி
?
போவது சொர்கமே உறுதியாயினும் - உயிர்
போக மறுக்கும் அச்சம் எப்படி ?
இன்னும் விடை காணா வினாக்கள் பல இருந்தும்
- கவிதை
கண் மூட முடிந்தது எப்படி
?
