Wednesday, June 20, 2012

வரமானவள் !!!!!!!


என் தங்கைக்காக தொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு சரம் - அது 
என் கையால் தொடுக்கப்பட்டது எனக்கு கிடைத்த வரம் ......................
       


 வரமானவள் !!!!!!!


தாய் தந்த பரிசாக
  எனக்கு கிடைத்த வரமாக,
முன் பின் பிறந்தாள் தமக்கையாய்
  அன்பில் என்றும் அன்னையாய்.....

கண் திறந்து காலம் முதலாய் 
   கரம் பிடித்து நாட்கள் தொடர்ந்து
ஓடி விளையாடிய நாட்களும்,
   கூடி கொண்டாடிய இடங்களும்

மரணம் தீண்டும் வரை
       மனதினில் நிற்கும்,
மறு ஜென்ம வேளையிலும்
    மறக்காமல் இருக்கும்.  
     
பங்கிட்டு உண்கையில்  மட்டும்
      பகைவராய் இருவரும் அவ்வயதில்..

அளவாய் சண்டையிட்டதும்,
   அளவுக்கதிகமாக அன்பு வைத்ததும் 
உன்னிடம் மட்டுமே!

நெய் முறுக்கோ, நிலக்கடலையோ 
   இலந்தை வத்தலோ, ஈச்சம்பழமோ 
பகிர்ந்து தானே உண்பாய் - எப்படி
       பாசம் அதிகம் கலப்பாய்!

வளர்ந்த நாட்களிலும்,
       வாழ்ந்த காலங்களிலும் 
பக்க துணையாய் நீயே,
  பாசத்தில் நீ என் தாயே!

பகிர்ந்துண்டு உண்பதிலும் 
 பாசம் காட்டி வாழ்ந்ததிலும் 
பெற்றவளின் நிகர் நீயே 
  மற்றெல்லாம் வெறும் மாயே 


தங்கமும் மதிப்பில்லை என்
       தமக்கைக்கு முன்னால்,
தாமரையும் அழகில்லை என்
      தாரகைக்கு முன்னால்....

தவம் செய்யாமல் கிடைத்த 
   வரம் நீ எனக்கு......!

Wednesday, June 13, 2012

வைரமுத்துவுடன் சின்ன வம்பு !



ரசிக்க  மட்டுமே., 
வைரமுத்துவுடன் சின்ன வம்பு

காதலித்துப்பார் , கையெழுத்து அழகாகும் ..
தலையெழுத்து என்னாகும் ?

உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் ...
கடவுலாவேனோ ? ஆம் இறப்பவர்கள் கடவுளாவார்கள் என்பது நம்பிக்கை.

உலகம் அர்த்தப்படும் ...
உலகத்தார் கூறிய அறிவுரைகளின் அர்த்தம் விளங்கம்.

இராத்திரியின் நீளம் விளங்கும்...
நிமிடத்திற்கு 50 பைசா என்றால்? இரவு முழுவதும் !!!!!!! நீளம் விளங்கிற்று...

தபால்காரன் தெய்வமாவான்...
தபால் பெட்டி வண்ணத்தில் அவ்வப்பொழுது உடம்பில் வியர்வை வழியும் !

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்...
கண்ணாடி கூட மதிக்காதோ என்னவோ ?

காக்கை கூட கவனிக்காது , ஆனால் உலகமே உன்னை ...
ஆம்! என் காதலி என்னை கவனிப்பதில்லை.

கண்ணிரெண்டும் ஒளி கொள்ளும்...
கடைசி தேதி தொலைபேசி கட்டணம் பார்க்கையில்!

தலையணை நனைப்பாய்...
கடன் கொடுத்தவன் காரி துப்புகையில் வேற என்ன செய்ய ?!

மூன்று முறை பல் துலக்குவாய்...
இதை விட வேறென்ன சான்று வேண்டும் பைத்தியம் என்பதற்கு!!!

காத்திருந்தால் நிமிடங்கள் வருடங்கள் என்பாய் , வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்கள் என்பாய்...
முதல் மூன்று மாதங்கள் முறையே அதுஅடுத்த மாதம் அப்படியே மாறும்!

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா ஒரு உருளை உருள காண்பாய்...
துக்கம் தொண்டையை அடைக்குமென்று சும்மாவா சொன்னார்கள்!

இதயம் அடிக்கடி இடமாறி துடிக்கும்...
இடப்புறம் இதயம் , வலப்புறம் வாயுதொல்லை !

உன் நரம்புகளே உன்னுள் நாணேற்றி அம்புவிடும்... 
தலை தூக்கும் நரம்பு தளர்ச்சி!

காதல் திரைகளை காமம் கிழிக்கும் ...
இதுதான் பலக்காதலின் தொடக்கம், முடிவு இரண்டும் !

ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்...
இதை ஒப்புக்கொள்ளலாம் , அறிவியல் உண்மை.

சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கயே நிச்சயம் ...
இந்த வரியில் முதல் சொல் தேவையற்றது!!





Tuesday, June 12, 2012

பூ ஒன்று பூத்தது பூமியல் பெண்ணாக !!






கால்நூறாண்டு கடந்த கன்னிப்பூவே
          கறைபடியா வெண்பால் நிலவே,

கண்கொட்ட தோன்றுமோ உனை - காணும் நாழிகையில்
          செயலற்று போவேன் நீ சிந்தும் சிரிப்பினில்,

கைக்குழந்தை தேகம், கற்சிலை வாகும் - நீ கண்சிமிட்டி
          பேசும்போது உறைந்து போகும் என் ஊனும்., ., .,

கவை னது ருபத்தைந்து என்பதை
          ஏற்கமறுப்பர் உன் முகங்கண்டு,

அமுதம் ருக்கிய னி லூற்றாகி,
          ண்ணிலா க்கந்தனித்தின்று யைந்தாகி  
ப்பிலா டமாகி யோடிதிரியும்

பிரியமான தோழிக்கு ....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..........

Monday, June 11, 2012

Scintel


சின்டல்

அக்டோபர் 1 ,

வேலையில்லா வெட்டி இளைஞரின் 
                முகவரியில் மூத்தவனாய் !


நடந்து நடந்து நரம்பு அறுந்து 
                ஓடாய் தேய்ந்து உருகுளைந்தவனாய் !


நண்பன் ஒருவன் நல்வழி கூற  - 
                முயன்று பார்க்க முயற்சி செய்தேன் அன்று !


குளிர்ந்த மாதம் பெயரில் கொண்டு , குறுகுறு பார்வை கண்ணில் கொண்டு 
குழந்தை மனதை தன்னுள் கொண்டு கேள்விதனை கணைகளாய் கொண்டு - 


                துளைத்தெடுத்தான் ஒருவன் என்னுள் தோண்டி யெடுத்தான் தலைவன்!!


ஒன்றுமில்லை உள்ளே வருகையில் - இன்று
               
 போதவில்லை என் உணர்வினை விளக்கையில்.. 


நட்பு , பகை , சுகம் வலி,
               
 கூடல், ஊடல், கொஞ்சல் , கெஞ்சல்,


விருப்பு , வெறுப்பு, புன்னகை , கண்ணீர்,
               
 ஏற்றம் , ஏமாற்றம், சந்தர்பம், சமாதானம்,


இன்னும் எத்தனையோ இன்று! - என்
               
 காலப்பதிவில் கரையும் கணங்களாக ......


இவைகளில்,
விளையாட்டை சில , வீம்புக்காக சில
               
 யதார்த்தமாய் சில , எதிர்பார்ப்புடன் சில ......


என்னோடு உறவுகளாய் உணர்வுகளை
               
 பகிர்ந்த சிலரின் உரிமம் என்னுள்.....


பிறப்பால் ஒன்றாய் அல்ல ஒருவன் - உடன்
               
 பிறப்பாய் இருந்து சென்றானவன் ,


சுட்டியாய் ஒருத்தி , குட்டியாய் ஒருத்தி
               
 புட்டி போல் ஒருத்தி, தங்கக்கட்டி நிறம் ஒருத்தி 


தேன் கிண்ணம் ஒருத்தி,  தரையில் ஒரு அன்னம் ஒருத்தி 
                தமக்கையாய் ஒருத்தி , தளிராய் வந்து சேர்ந்தவள் ஒருத்தி..........


முதலணி முற்றுபெறவில்லை, மற்றொரு அணி மாற்றம் கேட்டது 
           வலையொன்று புள்ளியோடு என்னை வளைத்து போட்டது இறுதியில் ..








வானழகியே!!!!!!



வானழகியே!!!!!!

அமுதமூட்டி அம்மா காட்டி 
          அறிமுகமான அழகியவள் !
கையில் பிடித்து கட்டியணைத்து 
          கண்ணிலிட்டு காதல் செய்த கன்னியவள்!!

வெள்ளியெடுத்து வெண்பால் குழைத்து,
          மெல்ல தடவி மெருகு கொஞ்சம் ஊட்டி,
பகலவன் ஒளியை பக்குவமாய் வடித்து,
          பனித்துளி சேர்த்து பாவாய் கடைந்து,
அச்சிலிட்டு அழகாய் பொருத்தி ,
          அங்கம் கலைந்த தங்கம் அவள் !!

கன்னி கொள்ளும் நாணம் உனை
          கவ்வி கொள்ள,
மேகமதன் பின் மறைந்து
      முகம் நீ  மூடி கொள்ள !
வெட்கம் உனை ஆட்கொண்டு 
       வெற்றி கொள்ள!

முகம் மறைத்த கணம், உலகம் 
  முடங்கி கொள்ள!

முகம் காட்டு முழு நிலவே - உலகம் 
      வரம் பெற்று உயிர் பெறட்டும்!

காவியங்கள் எதுவும் 
  முடிந்ததில்லை நீயின்றி !
கவிதைகள் எதுவும் 

  மடிந்ததில்லை உன் பெயரின்றி !!



பணி மாற்றம் !!!



நல்லதொரு பணிமாற்றம் தான்
  
புது வடிவில் சீருடையும்
   புத்தம் புது வாகனமும்
சாய்ந்து கொள்ள இருக்கை வசதியும்
   சற்றும் தொய்வில்லா ஊதியமும்

நல்லதொரு பணிமாற்றம் தான்!

வேர்வையைத்  தடுக்க குளிர்சாதனமும்
  வேலைபளு குறைக்க வானொலியும்
வண்ண வண்ண விளக்குகளும்
    வாசனையோடு வாடிக்கையாளர்களும்

நல்லதொரு பணிமாற்றம் தான்!
   அதி சொகுசு பேருந்து நகர்த்த

இருந்தும் ஏனோ  
 ஏற்க மறுத்தது மனம் !

பேச்சு கொடுத்துப் பழகி மகிழும் 
    பாமர மக்களையும்
சினுங்கிப் பேசி சிரித்து கொஞ்சும் 
    சின்னக் குழந்தைகளையும்

பாரம் சுமந்து படிக்க போகும்
    பள்ளிப் பிள்ளைகளையும்     
படி தொங்கி  சினம்  மூட்டும்
    கல்லூரி காளைகளையும்
                                      

பிரிய விரும்பா பேருந்து ஓட்டுனர் !!






நான் ரசித்த எனது தூரிகை



Hexaware board ல் வரைந்த ஓவியம்..........

நிலவே முகம் காட்டு

Friday, June 8, 2012

அனுபவ வடு




காய்ந்த சருகுகள் மட்டுமல்ல - வாழ்வில்
    காயங்களும் பல கண்டு பழகியவன் நான் !

போ !

உன் ஏமாற்றம் 
   என்னை ஒன்றும் செய்து விடாது ....

அடி அனேகமாக பெரிதாக இருக்கலாம் !
    அனுபவத்தில் எனக்கு எள்ளளவு தான் !

மறை பொருள் !




கலாச்சார மாற்றம்

மானம் மறைக்க மார்பிலிட்ட
                                                  துப்பட்டா,
மாற்றம் வந்ததால் கழுத்தில்
                                                கரையேறியது!

கழுத்தோடு போகவுமில்லை ....

கறை படியாமல்லிருக்க கடைசியில்
                                               கரையேறியது முகத்தில்.....................!

விசைப்பலகை . . !



தட்டச்சு விசைபலசை (Keyboard)

களைத்து போட்ட எழுத்துக்களில்- விரல்
வார்த்தைத்தேடி விழையாடுமிடம் ..............

சொல்ல துடிக்கும் காதல் !


எனது முதல் கிறுக்கல் - 1999...................

                            சொல்ல துடிக்கும் காதல் !

சிறகிழந்தும் பறக்க துடிக்கும் பறவை !
வேரிழந்தும் வாழ துடிக்கும் மரம் !

வின்னிழந்தும் வெளிர துடிக்கும் மதி !
வீச்சம் குறைந்தும் வீச துடிக்கும் காற்று !

காற்று நின்றும் கானம் பாட துடிக்கும் குழல்!
கவி முடிந்தும் தொடர துடிக்கும் பொடல் !

இவைகளோடுநீ ஏற்க நினைக்காத போதும் - சொல்ல 
துடிக்கும் என் கொதல் ...............