கவிதை,
உன் பெயரை உச்சரிக்கும் போது
உள்ளூர நான் உணர்வது . . .
சிற்பம் ,
உன் உருவ நிழல் கூட
நிலத்தில் சாய ரசித்தது . . .
ஓவியம் ,
உயிர் கொடுக்கும் தூரிகை வணங்கி
வாழ்த்தொன்று வரைந்து கொண்டது . . .
இம்மூன்றும் உன்னோடு ஒப்பிட
இன்று மட்டுமே !
நாளை வேறு என்னவோ !
ஒவ்வொரு நாளும் உன்னோடு
ஒப்பிடும் சாக்கில் அவையவை
தன்னை அழகுபடுத்தி கொள்கிறது !


