Wednesday, December 25, 2013

விழித்துக்கொள்




உனக்கான பசி - நீ 
 உண்டால் தான் தீரும் 
உனக்கான துயர்  - உன்னால் மட்டுமே 
  உள்ளுணர முடியும்  . . . 

துடைக்க கரங்கள் மறந்தபோது 
 துளி துளியாய் கண்ணீர் எதற்கு . . .?

மூச்சடக்க முடிந்த மட்டும் - உனை 
  மூழ்காமல் காக்க நினைப்பர் 
மூச்சவர்க்கு தேவையெனில் - உன் 
  மேல் தூக்கி கால் வைப்பர் . . .

அன்பு, பாசம், காதல்
  பயிரிட்டது பலனுக்காகவே . . .
கஞ்சி, காசு, காமம் 
  அறுவடையில் நீ அறிவாய் ! 

அன்பை அள்ளிக் கொடுத்தாயின் 
  அடிமையென நகைப்பர் . . .
பாசம் வைத்தாயின் உன்னை 
  பணிய வைத்து அழகு பார்ப்பர் . . . 

எரிக்கப்பட்ட தீக்குச்சிகள் - தூர
  எறியபட்டவையே அன்றி ஏற்கப்பட்டதன்று !

பற்றவைக்கும் வரை மட்டுமே - நீ 
  பந்தமாய் இருப்பாய்
பற்றியதும் விரலுக்கும் - நீ
  பாரமென ஆவாய் !

உலக நியதியை உன்னிப்பாக 
 எண்ணிப் பார்
நல்லவன் வீழ்த்தப்படுவான்
  வல்லவனே வாழ்தப்படுவான் !

நிழலும் உன்னோடு 
  நிஜமாய் நடைபோடுவதில்லை . . .

வெளிச்சம் விளக்கில் இல்லையேல் 
  வெற்றிடம் மட்டுமே உன்னோடு அங்கே !

எண்ணிக்கொள் ,

வாழ வக்கத்து வாழ்பவனுக்கு 
  வானளவு வாய்ப்புகளும் சிறு வைக்கோல் பதர் தான் . . .    

வாழ்வில் வாஞ்சை கொண்டு போராடி பார் - சிறு 
  வைக்கோலும் உனக்கு வாள் போல் நிற்கும். . . 

உனக்கான பலமோ,பலவீனமோ
  உன்னால் வகுக்கப்பட்டதே !

உனக்கான எல்லாம் 
  உன்னால் உருவானதே !

விடியும் வரை விழித்திரு - முடியாவிடில் 
   உறங்குவதை நிறுத்திடு . . . 


Tuesday, November 26, 2013

முதலிரவு . . .

                                       






இனம் புரியா ஓர் இன்பம் 
    இமைகள் மூடாமல் பல கனவு . . .

மூச்சிலே ஏற்ற இறக்கம் 
    முகத்திலோ  புதுப்புது மாற்றம் . . . 

தூக்கமில்லா இந்த இரவு 
    துடிதுடித்தது உள்ளுணர்வு  . . .

 படபடத்த இதயம்  - பாடி 
    பறந்த என் இளமை  . . .

வறண்டு போன உதடுகள்
   வார்த்தை குழறும் நாவு . . . 

முத்து முத்தாய் வியர்வை 
      முதன் முதலாய் புது அனுபவம்  . . .

இப்படித்தான் நகர்ந்தது

முதல் வேலை கிடைத்த அந்த முதல் இரவு  . , . , !



Wednesday, October 30, 2013

நிலை


                             
காதல் ததும்ப கடவுளை வேண்டி 
       கையில் கட்டினால் கயிறொன்றை , காதலி  . . . 

கயிறின் நிறம் மாறவில்லை   - அவள்
        காதல் மனம் மாறியும்  . . 

 தற்போது என் காதல், ஒற்றை கயிறோடு மட்டுமே  . . .




Friday, September 6, 2013

மற(மாய்)ந்து விடுகிறேன் ! !

             


சொன்னது நீதானே !

                         அற்றைத் திங்கள் , அழகிய நன்நாள்    
                                      அருகில் அமர்ந்து அழகாக சிரித்து

                         வெட்கி நாணி வேறு பக்கம் பார்த்து 
                                       எச்சில் விழுங்கி எதார்த்தம் விடுத்து,  

                         வியர்வை நனைக்க விரல்களை பிசைந்து 
                                       படபட வார்த்தைகளாய் பயந்தவாறு 

             "உன்னை காதலிக்கிறேன்" என்று 

சொன்னது நீதானே !

                         பெற்றோர் மறுத்தாலும் 
                                      உற்றோர்  எதிர்த்தாலும் ,

                          உனையன்றி யாரையும் 
                                      எள்ளளவும் நினையேன் !

சொன்னது நீதானே !

                          மற்றவர் போல் அல்ல  - உற்ற 
                                      உனை நான் நினைப்பது

                          மற்றது போல் அல்ல -  உயிர் 
                                       உருக உனை காதல் செய்வது !

சொன்னது நீதானே !
        
                          காலைக் கதிரவன் 
                                       நீயாக வேண்டும் ,
                          மாலை மதியுமாய்  நீ 
                                        மட்டுமே வேண்டும் ! 

                          நாளின் முதன்முதல்
                                        நான் காணும் உலகம்
                          உன்முகம் தனிலே 
                                       தொடங்கிட வேண்டும் !

                          நாழிகை முடியும் நேரமும்
                    அருகில்  - உன் 
                           முகம் கொண்டு இமை 
                    மூடிட வேண்டும் !

சொன்னது நீதானே !

                         ஒரு நாள் உன் குரலில் 
                                    நனையாமல் நகர்ந்தால்

                          மறு நாள் என் மனம் 
                                   மழையரியா பாலையாய் !

சொன்னது நீதானே !
       
                         உன்பெயர் கொண்ட 
                                    குழந்தைகள் கண்டால் 
                          என் இதழ் குவியும்
                                    கன்னங்கள் மேலே !

                         உனை போல் யாரேனும்
                                   நகர்ந்திட கண்டால் 
                        என் இதழ் விரியும்
                                    உன் எண்ணங்களாலே !

சொன்னது நீதானே !

                        இத்தனையும் கூறிய உன் உதடுகள்  
                        இத்தனை கூரிய சொல்லை எப்படி

 சொல்லத் துணிந்தது  ! ?   "மறந்து விடு . . ."

                        உள்ளிருந்து வந்த வார்த்தைகள் 
                                 உண்மையெனில் . . .

                        உன் உதடு வேறு பெயரை 
                                 உச்சரிக்குமெனில் . . .

                       என்கை விடுத்து உன்னால் 
                                நடைபோட முடியுமெனில்  . . .

                      என் குரல் கேட்க நீ 
                              தேவையில்லை எனில் . . . 

                     உற்றவராயன்றி  மற்றவராய் 
                             எனை எண்ணினாய் எனில் . . . 

மறந்து விடுகிறேன் . . .

         உன்னையும் உன் மேல் கொண்ட காதலையும் அல்ல
                          உன்னோடு சேர்ந்து வாழ முடியா இவ்வுலகை  . . . 


மறந்து விடுகிறேன்  . . .

Monday, September 2, 2013

ம(தி) , மாது மது !





மது என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால், - மாதுக்கள் 

மாற்றத்தால் மனமுடைந்த  - மாந்தர்க்கு 

மருந்தே  இல்லாமல் போயிருக்கும் உலகில் ! ! 





Tuesday, August 27, 2013

கண்ணீர் அஞ்சலி !

                          

அன்புள்ள அம்மா , அப்பா  ! 
ஆருயிர் நண்பா !

மதிப்பிற்குரிய மாமா ! 
மரியாதைக்குரிய மாப்பிள்ளை !

என் உயிர் காதலியே ! 
என்றும் இனிய காதலா !

மடிந்து போன வாக்கியங்களை - அந்நாளில்
மடியில் சுமந்த கடிதங்களே . . . !

உணர்ச்சிகள் ஊட்டிய வரிகளும்
கனவுகள் கடத்திய காகிதமும்,


அறிவியல் ஆ(தீ)க்கத்தால்


அழிந்து போன உணர்வுகள் போல,

காணாமல் போன என் 
 இனிய கடிதமே உனக்கு  
கண்ணீருடன் அஞ்சலி . . .





Wednesday, August 14, 2013

எம்மண் மாண்டதும் , மீண்டதும் ! ! !

                                 

                                      எம்மண் மாண்டதும் , மீண்டதும் ! !






அணு  பிளந்து,  அண்டம் வளர்ந்து 
          கண்டம் பிரிந்து,  கருவாய்மாறி
கால மாற்றத்தால் கழனியோடு உருவான 
          கடவுளின் குழந்தை எம்பாரதமே . . . 

அனைதுலகுக்கும் அறிவியல் புகட்டி 
            அர்த்தசாஸ்திரம் முறையாய் இயற்றி 
ஆள்வதெற்கென்றெ பிறந்த நாம்  - எப்படி 
           ஆனோம் அடிமையாய்., ?


விற்க வந்தவன் விலை பேசிட  - விற்று 
         விட்டோம் நம் மண்ணை 
விலை போனது நம் அன்னை . . .

ஒண்ட வந்த பிடாரியொன்று ஊர்
          பிடாரியை விரட்டிய கதை 

டச்சுகளும் , தானிஷ் களும் 
       பிரெஞ்சுகளும், பிரிட்டிஷ்களும்
பிணம் திண்ணி கழுகுகளாய் 
       பிரித்தெடுத்தனர் எம்மண்ணை  . . . 


காற்றுக்குக் கப்பம் கட்டினோம் 
        கஞ்சி குடிக்க வரி கட்டினோம்,

காதலன் காதலியை பார்க்க ,
        கட்டிலில் கணவனோடு படுக்க,

குழந்தைகள் கூடி விளையாட 
        குலப்பெண்கள் மஞ்சள் நீராட,

அனுமதி வேண்டி நின்றோம்  - ஆம்  
         அடிமையாய் வாழ்ந்து வந்தோம் ! ! 


அறத்திற்கு பேர் போனோம் 
         ஆக்கத்திற்கு பேர் போனோம்,

வீரத்திற்கு பேர் போனோம் 
         விருந்தோம்பலுக்கும்  பேர் போனோம் 

அத்தனை உணர்வுகள் இருந்தும் ஏனோ 
         பயனின்றி வீணாய் போனோம் . . . 


காயம்பட்ட கத்திகள் எத்தனை ,
        கணவன் இழந்த மனைவிகள் எத்தனை  - ஒற்றை 
குமாரனை ஒளித்து வைக்காமல் 
        போருக்கு அனுப்பிய பெண்கள் எத்தனை . . . 


வெள்ளையனே ,

கத்திக்கு கத்தி என்றால் எங்கள்முன் 
காய்ந்து போன எள்ளடா நீ ,
கருவில் பெற்ற பயிற்சி  போதும் - 
      உங்கள்  கரு அறுத்து கழுகுக்கு போட . . . 


தூர இருந்து தூக்கி எறிந்த தோட்டாவும் 
        பொசுங்கி வந்து பீரிட்ட பீரங்கியும்  
எம்மூர் நாயும் கையாளும் சில முறை 
        பேயும் கையாளும்  . . . 
         

அரசன் முதல் ஆண்டி வரை ,
        குழந்தை முதல் குமரி வரை ,
குருதிகள் எத்தனை எம்மண்ணை 
        குளிப்பாட்டி கொஞ்சியிருக்கும் . . . 

எதற்கும் அஞ்சியவரும்  அல்ல  - நம்மை
     எவரும் மிஞ்சியவரும் அல்ல. . .  

எண்ணற்ற பெரியோரும் -  எதிர்த்து
       நின்ற இளைஞரும்
மாண்டு மடிந்த இம்மண் 
        மீண்டது எப்படி பாரீர் . . . 

போஸ் தலைமையில் போர்படை ஒன்று 
        கத்தி விடுத்தது, தோட்டா தொட்டது . . .
திரட்டிய படைகள் நடப்பதை கண்டு 
         காலனி படைகள் கண்தூக்கம் இழந்தது  . . . 

கல்லடி படாமல் கண்ணடி பட்டதோ ! 
    கண்ணாடி அணிந்தவன் காணாமல் போனான் . . . 

தலையின்றி படையும் படுத்தது போரில் 
    கடைசி முயற்சியும் முறிந்தது  போரில்  . . . 

இரு நூறு ஆண்டுகள் 
        இருளில் கழிந்தாலும்  . . .
இடுப்பில் துணியோடு 
       ஒளியாய் ஓர் ஆத்மா ! ! !

கத்தி பிடித்த கை  - கதர் 
    இராட்டை சுற்றிட 
ஓங்கிய கைகள் யாவும் 
     ஒடுங்கி போய் நின்றது  . . . .


அகிம்சை ஆயுதம் 
      மீட்டது மண்ணை, 
அடிமை உடைத்து  - உயிர்
      பெற்றது அன்னை  . .

பெற்ற சுதந்திரம் இருளில் என்றாலும்  
      ஏற்றம் என்றுமே விடியலை நோக்கி . . . 

பெற்றது அவர்களாயின் 
        போற்றிக் காப்பது நாமாகட்டும்  . . . . .

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். . . 

Wednesday, July 31, 2013

விதி !


இரு வேறு கொடிகள் , இரு வேறு பூக்கள் 
இலைகளின் இடையே ஒன்றாய் மலர்ந்தது,

காற்றில் ஆடி, கவிதை பாடி 
மகரந்தம் தூவி, மழைகளில் நனைந்து என

மறக்க முடியா நாழிகைகள் பல 
குறிப்பேடுகளில் குடியேறியது . . . 

முகம் பதிந்து, முத்தம் பகிர்ந்து 
தோளில் சாய்ந்து தொடர்ந்தது காதல் . . .

ஆடி பாடி அகம் மகிழ்ந்து 
அணைத்துக்கொண்டு அரங்கேறியது காதல்  . . .

அத்தனையும் ஆசை படவில்லை ஆண்பூ 
உயிருக்கு மேலாக அதனுள் பெண்பூ . . . 

செழிப்பாய் ஒரு கொடி , சிவந்த பூ கொண்டு 
இரண்டின் இடையே புதிதாய் மலர்ந்தது ,

தாங்கிய கொடியின் தவிப்பினை போக்க 
சேர்ந்தது பெண் பூ, புது கொடி பூவோடு . . .

சொந்த காலில் நின்றாலும் ஆண் பூ 
செழிப்பின்றி போனதால் வாழ்வின்றி போனது  . . .

புது பூவோடு மனம்கோர்த்த பெண்பூ 
கவிதை பாடிட, மகிழ்ந்தது ஆண் பூ ,

காலை புணர்ந்தது , காற்றும் அடித்தது 
கண் விழித்த போது அங்கே 

கருகி கிடந்தது ஆண் பூ கீழே . . .




Sunday, June 9, 2013

வெளிப்பாடு



இரண்டு வார்த்தைகள் தான் எல்லோரிடமும் ,

            சிலரிடம் அதன் மதிப்பு சில்லரையாய் ,

            சிலரிடம் அது நோட்டுகளாய் ,

            சிலரிடமோ அது வெறுமையாய் ,

            இன்னும் சிலரிடம் அது வெறுப்பாய் ,


மனதின் வெளிப்பாடை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு 
மறுபடியும் உச்சரிக்கிறான்

அந்த இரண்டு வார்த்தைகளை,.,.


 -- பிச்சைக்காரன். 




Monday, June 3, 2013

சிறப்பு




(Just for fun)

உனக்கு பயந்து பண முடிப்பில் 

           ஒளித்து வைத்த ரூபாய் நோட்டும் 

இன்று 

ஒரு வேளை உணவுக்காக 

                 உற்ற நேரத்தில் உதவுதடா ., 

உன்னைப்போலவே  .,

நண்பா  ! 




Thursday, April 18, 2013

கண்கண்ட தெய்வம் !


                
கூட்ட நெரிசலில் ,
           கோவில் வாசலில்,

தோளில் தூக்கி 
           தொழுவதற்கு காண்பித்து,

தோள் வலி பொருத்து நின்று 
        தொலை தூர சிலையினை நீ காட்ட,

கண்முன் தெரியும் தெய்வம் - உனையன்றி
                  கற்சிலையை தொழுவேனோ இவ்வுலகில்

அப்பா  !!!!!!!!!!!