முதல் பார்வையில் முத்தம் பதிப்பதும்,
அடுத்த
நெருக்கத்தில் அனுபவிக்க நினைப்பதும்
அழகிய
காதலின் அம்சம் இல்லையென
உண்மை காதலை உன்மேல் கொட்டியது
- நீ
நடைமுறை
பழக்கமென நினைக்கவில்லை போலும் . . .
மன்னித்துவிடு
! ! !
வகை வகையாய் ஆடையுடுத்தி
அழகு
பார்க்க நினைத்துவிட்டேன்
வளையத்திற்குள்
இருப்பது தான் - உன்
விருப்பமென்று
அறியாமல் . . .
மன்னித்துவிடு
! ! !
அதிகாரம்
கொண்டுவிட்டால்
சுதந்திரம்
போய்விடுமென்று
அகங்காரம்
அடக்கி நின்றது - உனக்கு
இளக்காரமாய்
தெரிந்தது போலும் . . .
மன்னித்துவிடு
! ! !
பெற்றவள்
இடத்தினை உலகில்
எவளும் தொட்டிட முடியாதிருந்தும் - காதல்
கொண்டதால்
உன்னையே அவளாய்
கொண்டது
தவறுதான் உணர்ந்தேன் இன்று . . .
மன்னித்துவிடு
! ! !
யோசனை
, விவாதமும் உன்னுடன் மட்டுமே - கேட்டு
எடுத்த
முடிவுகள் எத்தனையோ இருக்க
சுய முடிவுகள் தெரியாமல் அல்ல - நமக்குள்
சுயங்கள்
சுயமாய் வேண்டாம் என்று . . .
மன்னித்துவிடு
! ! !
அரசியின்
வயிற்றில் பிறந்தவன் நான் - இளம்
அரசியாய்
உன்னை கருதிவிட்டேன்
பணிப்பெண்
பட்டம் வேண்டி நீயோ
பரிகாசமாய்
என்னை எண்ணினாய் போலும் . . .
அறியாமல்
தந்த ஸ்தானத்திற்காக . . .
மன்னித்துவிடு
! ! !
செல்வங்கள்
யாவும் வாழ்கையின் தேவையே
தேவைக்கு
இருப்பினும் பகட்டுக்காக இல்லையோ ?
செல்வம்
எல்லாம் நீயென நினைத்தேன்
சேர்வதற்கு
நாதியில்லை என நினைத்தாய் போலும்
. . .
மன்னித்துவிடு
! ! !
அழகிய மனையாள் அருகிலிருக்க
ஆசைக்காக
துணையாள் தேடாததும்,
அருகில்
அழகி நீ இருக்கையிலே
அடுத்தவளை
என் மனம் நினைக்காததும்
அலுத்துவிட்டது
போலும் உனக்கு . . .
மன்னித்துவிடு
! ! !
உன் பாடல்கள் என் விருப்பங்களாய்
உன்
வெறுப்புகள் என் வேதனைகளாய்
உன் தேடல்கள் என் ஆர்வங்களாய்
இல்லாதிருந்தால்
பிடித்திருக்கும் போலும் உனக்கு . . .
மன்னித்துவிடு
! ! !
தாயை போல தாங்கியது தவறோ?
- உன்னை
சேயாய்
நினைத்து கொஞ்சியது தவறோ ?
கோபிக்காமல்
விட்டு கொடுத்தது தவறோ ?
கூடி
கொஞ்சி பேசியது தவறோ ?
மன்னித்துவிடு
! ! !
கூறியிருந்தால்
ஒருவேளை
மாறியிருப்பேன்
உனக்காக . . .
எனினும்
எனக்கான அடையாளம் இதுதான் என்றும் . . .
மாற நினைக்கவில்லை நான் - என்னை
மறந்து போனாலும் நீ . . .
மன்னித்துவிடு ! ! !
மறந்து போனாலும் நீ . . .
மன்னித்துவிடு ! ! !
