இரவுப்பயணம்,
ஜன்னலோர இருக்கை,
சத்தமில்லா இரயில் பெட்டி,
சாரலோடு கை கோர்த்த தூறல் . . .
தூறல்கள் நடுவில்
துள்ளல் போடும் மின்னல்,
துள்ளல் போடும் மின்னல்,
மின்னலுக்கு தாளம் போடும்
மிருதங்க இடி . . .
மிருதங்க இடி . . .
உன் வரவு என்னோடு
இல்லாமையால்,
இவை யாவையும் ரசிக்க வேண்டிய
கட்டாயத்தில் . . . நான் !