மங்கிய மாலை பொழுது ,
மரத்தின் கீழ், இருக்கையில் நான்,
நினைவூற்றுகள் நிசப்தமாய் வருடுகையில்
மனக்காற்று ஏனோ மவுனமாய் ஓடியது . . .
இனம் புரியா இன்பம் என்னில்
இறுதி சடங்கு நடத்தி நாலாகிவிட்டது. . .
வாசம்வீசும் காற்று என்னில்
வன்காற்றாய் மாறி விட்டது . . .
மரங்களின் மௌனங்களை கலைத்து
மகிழ்விக்கும் அதே பழைய தென்றல் . . .
திடுக்கிட்டு தன் நிலை உணருகையில்
வசந்தத் தோடு வீசிய அதே வாசம் ! ! !
வாசத்துக்கு சொந்தக்காரி அவள் ஒருத்திதானல்லவா ? ! ! !
திரும்பிப் பார்த்து
திகைத்து நிற்கையில்,
அதே திகைப்புடன்
அதே அழகி ! ! !
திகைத்து நிற்கையில்,
அதே திகைப்புடன்
அதே அழகி ! ! !
பாதங்கள் இரண்டும் பூமியில் இருப்பினும்
பறப்பது போன்ற பரவசம் எனக்கு ! ! !
கற்சிலை போலே கண் கொண்டாலும்
குருதியின் சூடோ கொப்பளித்ததுள்ளே ! ! !
நிதானம் சற்று நிலை தடுமாற - மறு
நிதானம் கொண்டு, நின்றேன் முன்னே ! ! !
உதடுகள் இரண்டும் ஈரம் இழக்க,
சதுரம் ஆட தள்ளாடி போனேன் ! ! !
ஆண்டுகள் கடந்தும் அதே
அழகிய அவள் ! ! !
எப்படி இருக்க ? கேட்பதன் முன்னே,
எப்படி இருக்கிறாள் ! ! ! ஏக்கமாய் பார்த்தேன் . . .
துளிகள் கோர்த்தன
கண்களின் இமையில் - துடி
கண்களின் இமையில் - துடி
துடித்து போனது
கணத்தில் இதயம் ! ! !
கணத்தில் இதயம் ! ! !
கழுத்தைச் சுற்றி
மாங்கல்யம் தொங்க,
மாங்கல்யம் தொங்க,
காலின் இடுக்கினில்
மெட்டியோ மின்னியது . . .
மெட்டியோ மின்னியது . . .
நெற்றி பொட்டு அவள்
திருமணம் சொல்ல,
அணிந்த மோதிரமோ அவள்
திருமணம் சொல்ல,
அணிந்த மோதிரமோ அவள்
கணவன் பெயர் சொன்னது . . .
புன்னகை விரிப்பில்
அவள் பூரிப்பு கண்டு,
அவள் பூரிப்பு கண்டு,
புரிந்து கொண்டேன்
அவள் வாழ்கையை நன்று . . .
அவள் வாழ்கையை நன்று . . .
நல்ல கணவன்
கிடைத்ததாய் சொல்ல,
நன்றி சொன்னேன்
கிடைத்ததாய் சொல்ல,
நன்றி சொன்னேன்
கடவுளுக்கு இன்று ! ! !
தொலைவில் இருந்தாலும் அன்று
தொடும் வானமாய் இருவரும் ,
அருகருகே அமர்ந்தாலும் இன்று
ஆளுக்கொரு திசையாய் . . .
அதே இருவரும் , . . .
அதே இருவரும் , . . .
என்னால் அவளையும்,
அவளால் என்னையும்
அவளால் என்னையும்
பார்க்க இயலவில்லை,
பேச
நா எழவில்லை . .
நா எழவில்லை . .
எங்கெங்கோ பார்த்துகொண்டும்,
ஏதேதோ பேசிக்கொண்டும்,
சுக வேதனையாய் சுழன்ற அந்த
கணங்களை சகித்து கொண்டும்
. . .
ஒரு பிரிவு அன்று என்
காதலியாய் நீ ,
மறு பிரிவில் இன்று வேறு
மனைவியாய் நீ . . .
என் நிலை கண்டு, கண் நீர்க்கும் என் நிழலோடு
உன்னை மட்டுமே நினைத்துகொண்டு . . .
எப்பொழுதும் .... நான் ! ! !
எப்பொழுதும் .... நான் ! ! !
(தொடரும் )