Saturday, February 6, 2016

காதல்(பாகம் - III) . . . நிழல் நீர்த்தக் கண்ணீர்







மங்கிய மாலை பொழுது ,
   மரத்தின் கீழ், இருக்கையில் நான்
நினைவூற்றுகள் நிசப்தமாய் வருடுகையில் 
   மனக்காற்று ஏனோ மவுனமாய் ஓடியது . . . 

இனம் புரியா இன்பம் என்னில் 
   இறுதி சடங்கு  நடத்தி நாலாகிவிட்டது. . . 
வாசம்வீசும் காற்று என்னில் 
  வன்காற்றாய் மாறி விட்டது . . . 

மரங்களின் மௌனங்களை கலைத்து 
   மகிழ்விக்கும் அதே பழைய தென்றல் . . .
திடுக்கிட்டு தன் நிலை உணருகையில் 
  வசந்தத் தோடு வீசிய அதே வாசம் ! ! !

வாசத்துக்கு சொந்தக்காரி அவள் ஒருத்திதானல்லவா ? ! ! !

திரும்பிப் பார்த்து
     திகைத்து நிற்கையில்,
அதே திகைப்புடன் 
     அதே அழகி ! ! !

பாதங்கள்  இரண்டும் பூமியில் இருப்பினும் 
  பறப்பது போன்ற பரவசம் எனக்கு ! ! !
கற்சிலை போலே கண் கொண்டாலும் 
  குருதியின் சூடோ கொப்பளித்ததுள்ளே ! ! !  

நிதானம் சற்று  நிலை தடுமாற  -  மறு 
    நிதானம் கொண்டுநின்றேன் முன்னே ! ! !
உதடுகள் இரண்டும் ஈரம் இழக்க, 
    சதுரம் ஆட தள்ளாடி போனேன் ! ! ! 

ஆண்டுகள் கடந்தும்  அதே 
  அழகிய அவள் ! ! ! 

எப்படி இருக்க ? கேட்பதன்  முன்னே, 
   எப்படி இருக்கிறாள் ! ! ! ஏக்கமாய் பார்த்தேன் . . .

துளிகள் கோர்த்தன 
    கண்களின் இமையில் -  துடி
துடித்து போனது 
     கணத்தில் இதயம் ! ! !

கழுத்தைச் சுற்றி 
       மாங்கல்யம் தொங்க,
காலின் இடுக்கினில் 
      மெட்டியோ மின்னியது . . . 

நெற்றி பொட்டு அவள்
      திருமணம் சொல்ல,
அணிந்த மோதிரமோ அவள் 
     கணவன் பெயர் சொன்னது . . . 
  
புன்னகை விரிப்பில் 
   அவள் பூரிப்பு கண்டு,
புரிந்து கொண்டேன் 
   அவள் வாழ்கையை நன்று . . .

நல்ல கணவன் 
     கிடைத்ததாய் சொல்ல,
நன்றி சொன்னேன் 
    கடவுளுக்கு இன்று ! ! ! 

தொலைவில் இருந்தாலும் அன்று 
   தொடும் வானமாய் இருவரும் ,  
 அருகருகே அமர்ந்தாலும் இன்று 
     ஆளுக்கொரு திசையாய் . . . 

அதே இருவரும் ,  . . .

என்னால் அவளையும்,
    அவளால் என்னையும் 
பார்க்க இயலவில்லை, பேச 
     நா எழவில்லை . . 

எங்கெங்கோ பார்த்துகொண்டும்
        ஏதேதோ பேசிக்கொண்டும்,
சுக வேதனையாய் சுழன்ற அந்த 
      கணங்களை சகித்து கொண்டும்  . . .

ஒரு பிரிவு அன்று என் 
     காதலியாய் நீ
மறு பிரிவில் இன்று வேறு 
     மனைவியாய் நீ . . .

என் நிலை கண்டு, கண் நீர்க்கும் என் நிழலோடு
 உன்னை மட்டுமே நினைத்துகொண்டு . . . 

எப்பொழுதும்  .... நான் ! ! !

(தொடரும் )


No comments: