Monday, January 5, 2015

மாற்றுப் பயணம் ! ! !






அதே அவசர இரவுப் பயணம்  . . .

அதிகமாய் தூங்கி கொண்டும் 
  அவ்வப்போது முன்டிகொண்டும் 
இரவு நகர்தலோடு - சில வேளை
  இசைகளின் வருடலோடு மட்டுமே . . . 
  
மாறுதலுக்காய் ஒரு பகல் பயணம்   . . .

யதார்த்தமாய் அமைந்தாலும் 
  எதிர்பார்ப்புடன் இதோ, இப்பொது ! !

ஜன்னலில் ஊடுருவிய  காலைக்  கதிர் 
   என் இருக்கையை என்னோடு பகிர்ந்து கொள்ள
பக்கத்து இருக்கையில் பாலகனோ - அவன் 
  பொம்மையோடு தன் இருக்கையை பகிர்ந்து கொண்டான்  . . .

முதல் இருக்கை நடத்துனருக்கும் 
  மூன்றாம் இருக்கைவரை முதியவர்களுக்கும் . . .
பக்கவாட்டின் பகிர்வுகள் சுவாரசியமாய் - ஒரு 
  காதல் ஜோடியுடயது . . . 

ஆகா ! பகிர்வுகளில் தான் எத்தனை விதம் ? 
  
அருகினில்  ஓடும் ஒர மரங்களும்
   தூரத்தில் நடை போடும் ஆல மரங்களும்  . . .

தோகை தொங்கிய கரும்புக்காடும்  -  தோல் 
    உரிந்து தொங்கிய வாழை கொல்லையும்  . . .

கொள்ளை அழகை இதுவரை - நான் 
  கொய்யாமால் போனது எவ்வாறு

பகலிலும் பல்ப் எரியும் ஒரு பம்புசெட்டு 
பாதி கட்டிய நிலையில் சில பாலங்கள் . . . 

பரிதாபம் ! ! ! 
தேவையற்று மின்சாரமும் 
  தேவையோடு மிதி சாரமும் வெட்டியாய் இங்கே ! ! 

கட்டி போட்டு மேயும் கன்னுகுட்டி 
 காம்பு விரட்டும் சாம்பல் கொக்கு 

பயிறு கண்டு மேயும் பசு மாடு 
 கயிறு கொண்டு எரிழுக்கும் இளங்காளை 

எங்கே சென்றீர்கள் கலைவான்களே
  ஏதோ படையுங்கள் இவைகள் கொண்டு  . . . இவைகளுக்காக ! ! 

அவரவர் பாடல்களோடு பயணிகளும் 
 இடையிடையே எச்சரிக்கை ஒளியோடு பேருந்துகளும்  . . .

இடை நில்லா பலகை கொண்ட பேருந்தையும்  
  இடையிட்டு நிறுத்தி அழைக்கும் விடுதி பையன் 

அவனுக்காகவே ஒரு தேநீர் பருகல் . . . 

குறுகிய பாதையில் குலுங்கி செல்கையிலும் 
  பல்ல மேடுகளில் பவ்வியமாய் செல்கையிலும் 
தொட்டிலில் துள்ளல் போட்ட செய்கை - இன்று 
  தொட்டு போனது சற்று நெஞ்சை  . . .  

இன்று காணக் கிடைத்த இக் காட்சிகளை 
   எப்படி இழந்தேன் நேற்றுவரை . . . 

இனி பயணித்தால் அது பகலில் தான் ! ! !