அதே அவசர இரவுப் பயணம் . . .
அதிகமாய்
தூங்கி கொண்டும்
அவ்வப்போது
முன்டிகொண்டும்
இரவு நகர்தலோடு - சில வேளை
இசைகளின்
வருடலோடு மட்டுமே . . .
மாறுதலுக்காய்
ஒரு பகல் பயணம் . . .
யதார்த்தமாய்
அமைந்தாலும்
எதிர்பார்ப்புடன்
இதோ, இப்பொது ! !
ஜன்னலில்
ஊடுருவிய காலைக் கதிர்
என்
இருக்கையை என்னோடு பகிர்ந்து கொள்ள
பக்கத்து இருக்கையில் பாலகனோ - அவன்
பொம்மையோடு தன் இருக்கையை பகிர்ந்து கொண்டான் . . .
முதல் இருக்கை நடத்துனருக்கும்
மூன்றாம்
இருக்கைவரை முதியவர்களுக்கும் . . .
பக்கவாட்டின் பகிர்வுகள் சுவாரசியமாய் - ஒரு
காதல் ஜோடியுடயது . . .
ஆகா ! பகிர்வுகளில்
தான் எத்தனை விதம் ?
அருகினில்
ஓடும் ஒர மரங்களும்
தூரத்தில்
நடை போடும் ஆல மரங்களும்
. . .
தோகை தொங்கிய கரும்புக்காடும் - தோல்
உரிந்து
தொங்கிய வாழை கொல்லையும் . . .
கொள்ளை
அழகை இதுவரை - நான்
கொய்யாமால்
போனது எவ்வாறு ?
பகலிலும்
பல்ப் எரியும் ஒரு பம்புசெட்டு
பாதி கட்டிய நிலையில் சில
பாலங்கள் . . .
பரிதாபம் ! ! !
தேவையற்று
மின்சாரமும்
தேவையோடு
மிதி சாரமும் வெட்டியாய் இங்கே
! !
கட்டி போட்டு மேயும் கன்னுகுட்டி
காம்பு
ஈ விரட்டும் சாம்பல்
கொக்கு
பயிறு கண்டு மேயும் பசு
மாடு
கயிறு
கொண்டு எரிழுக்கும் இளங்காளை
எங்கே சென்றீர்கள் கலைவான்களே,
ஏதோ
படையுங்கள் இவைகள் கொண்டு . . . இவைகளுக்காக
! !
அவரவர்
பாடல்களோடு பயணிகளும்
இடையிடையே
எச்சரிக்கை ஒளியோடு பேருந்துகளும் . . .
இடை
நில்லா பலகை கொண்ட பேருந்தையும்
இடையிட்டு நிறுத்தி அழைக்கும் விடுதி பையன்
அவனுக்காகவே ஒரு தேநீர் பருகல் . . .
குறுகிய
பாதையில் குலுங்கி செல்கையிலும்
பல்ல
மேடுகளில் பவ்வியமாய் செல்கையிலும்
தொட்டிலில்
துள்ளல் போட்ட செய்கை - இன்று
தொட்டு
போனது சற்று நெஞ்சை . . .
இன்று காணக் கிடைத்த இக் காட்சிகளை
எப்படி
இழந்தேன் நேற்றுவரை . . .
இனி பயணித்தால் அது பகலில் தான்
! ! !

No comments:
Post a Comment