Friday, July 18, 2014

உண்மைக்காதல் . . உண்மையில்லா காதலி . .




காதலுக்குக் காரணம் தேவையில்லை  - இருந்தால் 
அது தேவையே அன்றி காதல் இல்லை  . . 

கழண்டு கொள்வதற்கு காரணம் சொன்னாயே,
கலியுகத்தில் இதுபோல் கண்டதில்லை எங்கும் ! ! !

எவளோ விளக்கி சொன்னாளாம் வாழ்கையை 
இவளோ விலகி சென்றாளாம் காதலை ! ! !

எவனோ கலங்கி நின்றானாம்  - ஆகையால் 
இவள் கலக்கம் துடைதாலாம்  ! ! !

காதல் முறிக்க கண்டதில்லை ஒரு 
காரணம் இதுபோல் ! ! !

பொழுதுபோக்காகவா காதல் செய்தேன் -  என்
பொழுது முழுதும் நீயென கொண்டேன் ! ! !

வெட்கி போகிறேன் உனை விலகுவதால் அல்ல
வெகு காலம் விரும்பியதால் உன்னை  . . . 

கண்டு ரசித்த கண்களும் வேண்டாம் 
கட்டியணைத்த கைகளும் வேண்டாம் 

உண்மையாய் உயிரில் கலந்த காதல்  - கொண்ட 
உள்ளமும் எனக்கு கொஞ்சமும் வேண்டாம் . . . 

கூறிய எதுவும் இனி வேண்டாம் எனக்கு  - இருந்தால் 
அது காதலின் புனிதம் கெடுத்திடும் பிணக்கு  . . . 

இது போல் ஒரு உன்னத காதலை 
இனியும் இவ்வுலகம் காண வேண்டாம்!!