அது தேவையே அன்றி காதல்
இல்லை . .
கழண்டு கொள்வதற்கு காரணம் சொன்னாயே,
கலியுகத்தில்
இதுபோல் கண்டதில்லை எங்கும் ! ! !
எவளோ விளக்கி சொன்னாளாம் வாழ்கையை
இவளோ விலகி சென்றாளாம் காதலை
! ! !
எவனோ கலங்கி நின்றானாம் - ஆகையால்
இவள் கலக்கம் துடைதாலாம் ! ! !
காதல் முறிக்க கண்டதில்லை ஒரு
காரணம்
இதுபோல் ! ! !
பொழுதுபோக்காகவா
காதல் செய்தேன் - என்
பொழுது
முழுதும் நீயென கொண்டேன் ! ! !
வெட்கி
போகிறேன் உனை விலகுவதால் அல்ல,
வெகு காலம் விரும்பியதால் உன்னை . . .
கண்டு ரசித்த கண்களும் வேண்டாம்
கட்டியணைத்த
கைகளும் வேண்டாம்
உண்மையாய்
உயிரில் கலந்த காதல் - கொண்ட
உள்ளமும்
எனக்கு கொஞ்சமும் வேண்டாம் . . .
கூறிய எதுவும் இனி வேண்டாம்
எனக்கு - இருந்தால்
அது காதலின் புனிதம் கெடுத்திடும்
பிணக்கு . . .
இது போல் ஒரு உன்னத
காதலை
இனியும்
இவ்வுலகம் காண வேண்டாம்!!
No comments:
Post a Comment