Tuesday, August 28, 2012

மாதர் தன் மனக்குமுறல்..




ஒரு பெண்ணின் ஏக்கம்தனை(Despondency) என் கவிதையின் வாயிலாக தெரியபடுத்த எடுத்த முயற்சியின் தொடக்க கிறுக்கல் இது .....,

                      மாந்தர் தன் மனக்குமுறல்..




எதையும் ஆசைபட்டதுமில்லை  - அதற்காக 
                எனை எவையும் ஆசைபடவிட்டதுமில்லை ...
தெரிந்த பின் மறையலாம் இயல்பு - 
                நினைக்கும்போதே மறைந்தால் அதில் எது என் தவறு ?!!

பழையதாயினும் பொருத்தமான வரிகள் ,
                "உப்பு விற்க போனேன்அடை மழை"
                "மாவு விற்க போனேன்அசுர காற்று"
அது ஐப்பசியுமல்ல ஆடியுமல்ல - என் 
                வாழ்வின் அத்தனை நாட்களுமே !!

சிறகுகள் இருக்கும் பறக்க இயலாது !
                காலிரெண்டிருக்கும் கடக்க இயலாது !
மடிகள் இருக்கும் மயங்க இயலாது !
                கைகளிருக்கும் அணைக்க இயலாது !
அத்தனை இருந்தும் ஏற்க இயலாது - ஏற்றவை 
                யாவும் விரும்பியதல்லாது ................!!

காலங்கள் கைவிட்டது,
                கண்ணீர் துடைக்கும் கைகளும் கைகழுவிவிட்டது ,
சொந்தங்கள் போயே விட்டது,
                சொத்தும் என் சுகங்களும் சொதப்பலிலிட்டது....!

காதலன் உள்ளான் கண்ணீர் துடைக்க - என் 
                ஆடவன் உள்ளான் அல்லலை நீக்க,
உற்றவன் உள்ளான் உணர்வினை விளக்க - என் 
                உரிமையானவன் உள்ளான் உண்மையாய் இருக்க...
என்றென்னியிருந்த காலமதுவும் - கானல் 
                நீராய் மறைந்தது ஏனோ ?
துளையில்லா குழலாய் நான் 
                கூவினால் கேட்பது யாரோ??????

பிறப்பை தேர்ந்தெடுக்கவில்லை,
                பெற்றோரையும் தேர்ந்தெடுக்கவில்லை,
வாழ்வை தேர்ந்தெடுக்கவில்லை,
                வாழும் முறையையும் தேர்ந்தெடுக்கவில்லை, 
சாவை மட்டும் விரும்பி ஏற்கிறேன் !!!

ஆலையில் அகப்பட்ட கரும்பாய் !
                சேற்றில் சிதையுண்ட மீனாய் !
கிழிந்து தொங்கிய கீற்றாய் ! - இனியும் 
                வாழ என்னால் முடியவில்லை!!!!!

இதோ ,
 இல்லாத ஓர் உலகம் இருக்கும் - அங்கே 
          எனக்கும் நல்லதொரு இடமிருக்கும் என்ற எண்ணத்தில் .... 
போகிறேன் !!

என் வரிசையில் நிற்கும் பெண்களின் 
                கடைசியாள் நானாக இருக்கட்டும் ...... கடவுளே !!!!!!!!!!