ஒரு பெண்ணின் ஏக்கம்தனை(Despondency) என் கவிதையின் வாயிலாக தெரியபடுத்த எடுத்த முயற்சியின் தொடக்க கிறுக்கல் இது .....,
மாந்தர் தன் மனக்குமுறல்..
எதையும் ஆசைபட்டதுமில்லை - அதற்காக
எனை எவையும் ஆசைபடவிட்டதுமில்லை ...
தெரிந்த பின் மறையலாம் , இயல்பு -
நினைக்கும்போதே மறைந்தால் அதில் எது என் தவறு ?!!
பழையதாயினும் பொருத்தமான வரிகள் ,
"உப்பு விற்க போனேன், அடை மழை"
"மாவு விற்க போனேன், அசுர காற்று"
அது ஐப்பசியுமல்ல , ஆடியுமல்ல - என்
வாழ்வின் அத்தனை நாட்களுமே !!
சிறகுகள் இருக்கும் பறக்க இயலாது !
காலிரெண்டிருக்கும் கடக்க இயலாது !
மடிகள் இருக்கும் மயங்க இயலாது !
கைகளிருக்கும் அணைக்க இயலாது !
அத்தனை இருந்தும் ஏற்க இயலாது - ஏற்றவை
யாவும் விரும்பியதல்லாது ................!!
காலங்கள் கைவிட்டது,
கண்ணீர் துடைக்கும் கைகளும் கைகழுவிவிட்டது ,
சொந்தங்கள் போயே விட்டது,
சொத்தும் என் சுகங்களும் சொதப்பலிலிட்டது....!
காதலன் உள்ளான் கண்ணீர் துடைக்க - என்
ஆடவன் உள்ளான் அல்லலை நீக்க,
உற்றவன் உள்ளான் உணர்வினை விளக்க - என்
உரிமையானவன் உள்ளான் உண்மையாய் இருக்க...
என்றென்னியிருந்த காலமதுவும் - கானல்
நீராய் மறைந்தது ஏனோ ?
துளையில்லா குழலாய் நான்
கூவினால் கேட்பது யாரோ??????
பிறப்பை தேர்ந்தெடுக்கவில்லை,
பெற்றோரையும் தேர்ந்தெடுக்கவில்லை,
வாழ்வை தேர்ந்தெடுக்கவில்லை,
வாழும் முறையையும் தேர்ந்தெடுக்கவில்லை,
சாவை மட்டும் விரும்பி ஏற்கிறேன் !!!
ஆலையில் அகப்பட்ட கரும்பாய் !
சேற்றில் சிதையுண்ட மீனாய் !
கிழிந்து தொங்கிய கீற்றாய் ! - இனியும்
வாழ என்னால் முடியவில்லை!!!!!
இதோ ,
இல்லாத ஓர் உலகம் இருக்கும் - அங்கே
எனக்கும் நல்லதொரு இடமிருக்கும் என்ற எண்ணத்தில் ....
போகிறேன் !!
என் வரிசையில் நிற்கும் பெண்களின்
கடைசியாள் நானாக இருக்கட்டும் ...... கடவுளே !!!!!!!!!!

No comments:
Post a Comment