Friday, August 3, 2012

எப்பொழுது ??








எப்பொழுது காதல் கொண்டேன் ?

தூரத்தில் ஒளியாய் நீ 
             தெரிந்த போதா?
தூரல் உன்மேல் தூவி 
                பார்த்த போதா ?

அதிர்ஷ்ட துளிகளில் ஓரிரண்டு - உன்
      அங்கம் தொட்டு தங்கமானபோதா ?
இல்லை
ஆடை நனைய ஓடி வந்தாயே அப்பொழுதா?

எப்பொழுது காதல் கொண்டேன் ?

அலுவலகம் வந்து 
      அருகில் அமர்ந்து - திரும்பி
 பார்த்து நான் 
         திகைத்த போதா?

புதிதாய் வந்தவள் 
        நான்தான் என்று
புதிராய் எனைப்பார்த்து 
        புன்னகைத்த போதா?

உன் பெயரை நான் கேட்க,
     என் பெயரை மறந்து நின்று,
முதல் பார்வையிலேயே 
     முக்தி அடைந்தேனேஅப்பொழுதா?

எப்பொழுது காதல் கொண்டேன் ?

அழகாய் சிரித்து 
     அஹிம்சையாய் நகம் கடித்தாயே!
விரல்களால் கன்னம் தடவி 
       மெல்லிய இசை இசைத்தாயே!

காதோரம் ஒற்றை முடியை 
       காற்றுகள் வம்பிழுக்க
இலகுவாய் இழுத்ததனை
       காதிடையில்  வைத்தாயே !

நான் தீண்ட எத்தனிக்கும் 
    உன் கார் கூந்தலினை
காற்றின்  கரம் தழுவவும்
      கவிதையாய் கோபம் வந்ததேஅப்பொழுதா?

எப்பொழுது காதல் கொண்டேன் ?

கழுத்தோடு காதல் கொண்ட 
      பாசியதை விரலெடுத்து ,
குவளை மலர் இதழினிடையே 
      குறுக்காக அதை நிறுத்தி 
முல்லை பூ பற்கள் கொண்டு 
      வலிக்காமல் கடிப்பாயேஅப்பொழுதா ?

       அப்பொழுதோஇப்பொழுதோ?  இல்லை அவ்வப்போழுதோ?

எப்பொழுதானால் என்ன !

முப்பொழுதும் உன் கற்பனையோடு கரையும் பொது !!!!!!