எப்பொழுது காதல் கொண்டேன் ?
தூரத்தில் ஒளியாய் நீ
தெரிந்த போதா?
தெரிந்த போதா?
தூரல் உன்மேல் தூவி
பார்த்த போதா ?
பார்த்த போதா ?
அதிர்ஷ்ட துளிகளில் ஓரிரண்டு - உன்
அங்கம் தொட்டு தங்கமானபோதா ?
இல்லை
இல்லை
ஆடை நனைய ஓடி வந்தாயே அப்பொழுதா?
எப்பொழுது காதல் கொண்டேன் ?
அலுவலகம் வந்து
அருகில் அமர்ந்து - திரும்பி
அருகில் அமர்ந்து - திரும்பி
பார்த்து நான்
திகைத்த போதா?
திகைத்த போதா?
புதிதாய் வந்தவள்
நான்தான் என்று
நான்தான் என்று
புதிராய் எனைப்பார்த்து
புன்னகைத்த போதா?
புன்னகைத்த போதா?
உன் பெயரை நான் கேட்க,
என் பெயரை மறந்து நின்று,
என் பெயரை மறந்து நின்று,
முதல் பார்வையிலேயே
முக்தி அடைந்தேனே, அப்பொழுதா?
முக்தி அடைந்தேனே, அப்பொழுதா?
எப்பொழுது காதல் கொண்டேன் ?
அழகாய் சிரித்து
அஹிம்சையாய் நகம் கடித்தாயே!
அஹிம்சையாய் நகம் கடித்தாயே!
விரல்களால் கன்னம் தடவி
மெல்லிய இசை இசைத்தாயே!
மெல்லிய இசை இசைத்தாயே!
காதோரம் ஒற்றை முடியை
காற்றுகள் வம்பிழுக்க
காற்றுகள் வம்பிழுக்க
இலகுவாய்
இழுத்ததனை
காதிடையில் வைத்தாயே !
காதிடையில் வைத்தாயே !
நான் தீண்ட எத்தனிக்கும்
உன் கார் கூந்தலினை
காற்றின் கரம் தழுவவும்
உன் கார் கூந்தலினை
காற்றின் கரம் தழுவவும்
கவிதையாய்
கோபம் வந்ததே! அப்பொழுதா?
எப்பொழுது காதல் கொண்டேன் ?
கழுத்தோடு காதல் கொண்ட
பாசியதை விரலெடுத்து ,
குவளை மலர் இதழினிடையே
குறுக்காக அதை நிறுத்தி
பாசியதை விரலெடுத்து ,
குவளை மலர் இதழினிடையே
குறுக்காக அதை நிறுத்தி
முல்லை பூ பற்கள் கொண்டு
வலிக்காமல் கடிப்பாயே! அப்பொழுதா ?
வலிக்காமல் கடிப்பாயே! அப்பொழுதா ?
அப்பொழுதோ? இப்பொழுதோ?
இல்லை அவ்வப்போழுதோ?
எப்பொழுதானால் என்ன !

No comments:
Post a Comment