தோளில்
சாய்வாய் சில நேரம் - என்
தோழியாய் வாழ்வாய் சில நேரம் !
இடையில் இடருவாய் சில நேரம் - நீ
இல்லாமல் நான் செல்லேன் சில நேரம் !
மழையில்
குடையாய் சில நேரம் - மாறுவாய்
நிழலாய் சில நேரம் !
என்
அத்தனையும் உன்னுள் சில நேரம் - என்
இரகசிய அறையாய் சில நேரம் !
காதலன்
அறியா காரியமும் - பகிர்ந்தேன்
உன்னோடு சில நேரம்!
காட்ட முடியா
கோபத்தையும் - உன்னிடம்
காட்டியதுண்டு சில நேரம்!
கட்டியணைத்து அழுது
புலம்ப - என்
காதலனாய் மாறினாய் சில நேரம்!
உணர்வுகள் புரியும்
"கைப்பை" யே - என்
உறவென்றும் நீயே எந்நேரமும்!
2 comments:
Praba Super Da....Velmurugan
Thanks machi., :)
Post a Comment