அவளின் நான் :
பூத்திருக்க காத்திருந்த
பொன் மொட்டொன்று,
புலர்ந்த நேர காற்றிடம்
காலை வணக்கம் சொல்லியதோ . . ! !
என்னவள் : காலை லையே கவிதையா ?
Mmm நல்ல இருக்கு :) என்ன பண்ற ?
அவளின் நான் :
உளியின் வேலை
உருவம் கொடுப்ப தெனில் !
உன்னவன் வேலை
உன்னை நினைப்பது மட்டும் தானே !!!
என்னவள் :
பொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் . . . சரியான
fraud da நீ . . .
ஆமா . . நெஜமாவே
என்ன தான் நெனச்சிகிட்டிருந்தியா ?????
அவளின் நான் :
உதிக்கும் ஆதவன் உண்மையாயின் . . .
உச்சி கொண்ட மாமலை உண்மையாயின் . . .
உதிரும் செண்டுகள் உண்மையாயின் . . .
ஊரும் எறும்புகள் உண்மையாயின் . . .
உனக்காய் உதிர்த்த வார்த்தைகள்
பொய்யாய் எப்படி போகும் அன்பே ???
என்னவள் : என்னமோ ! உன்ன
நம்புறேன் . .
பார்போம் . . அப்புறம் சாப்டியா ?
அவளின் நான் :
படைத்தவனுக்கு படைத்துவிட்டு
படைத்ததில் மீதியை
பகிர்ந்துண்ணுவது தானே
பகிர்ந்துண்ணுவது தானே
பக்தியாளனுக்கு தர்மம் . . .
நீ உண்பதில் என்
நீ உண்பதில் என்
உயிர்
வாழும் போது
நான் வேறு தனியாய் எதற்கு . . .
என்னவள் : oiiiiiiii .
. . lines
lam நல்லா தான் இருக்கு .
. but ஒழுங்கா போய் சாப்பிடு. .
நான் சாப்டேன் pa
.
. இப்ப தான் . . idly . . .
அவளின் நான் :
கண் பார்த்து, கரம் தொட்டு
இதழ்
தடவி, ஈரக்கொலையில் இறங்கி
இதமான அவள் இதயமருகில்
நழுவி
சென்ற இட்லியே
இருந்திருக்கலாம் உனை போலாவது . . .
என்னவள் : எப்பா சாமி . . மொதல்ல நீ சாப்டு அப்புறம் முழாம் பூசலாம் . . . அதுவரை நான் reply பண்ண மாட்டேன் . . .
அவளின் நான் :
கைப்பிடி சோறும், கால் கரண்டி குழம்பும்
சிறு
கிண்ண கூட்டும், சிக்கி தவிக்கையில்
செவந்தவள் உன் முகம் சிந்தையில் ஓடிட
சிறிது
நேரத்திலேயே சில கவளம் உள் போயிற்று . . .
என்னவள் : செம கட்டு கட்டிருக்க .. . .mmm .
. .இதுல build
up வேற சாப்ட முடியலன்னு .
.
சரி ,
நேத்து night dp வச்சானே , எப்புடி இருந்துச்சுனு நீ சொல்லவே இல்ல . . .??
அவளின் நான் :
நயமான இரவு அது ,
நாணல்
கொஞ்சும் காற்றும் வேறு ,
மிதமான இரைச்சல் கொஞ்சம்
மேகம்
தெரியும் வெளிச்சம் அதில்
பளிச்சிடும் பொன்னிலா தெரிந்தால் . . . !!!!! ???
என்னவள் : அப்போ நான் நிலா மாதிரி இருந்தேனா ?
அவளின் நான் :
படைக்கப்பட்ட யாவும்
அழகென நினைத்தேன்
பாவை உன்னை
பார்க்கும் முன் வரையே . . .
பால் நிலா கூட
பாதி
அழகே - உன்
பவள விழி சற்று
சுருங்கிட கண்டால் . . .
என்னவள் : வார்த்தைகள் லாம் நல்ல இருக்குடா .
. . . .
அவளின் நான் :
வார்த்தைகள் ரசிக்கும் வஞ்சியே - நான்
வர்ணித்த அழகை ரசித்தது போதும்
அழகிய அவளை ரசிப்பாயானால்
அப்படியே நிற்ப்பாய் அவளழகில் மயங்கி . . .
என்னவள் : இது யார சொல்ற ? என்னை தானே . . அதானே வேற யாரையாவது சொல்லி பாரு .
. மவனே , கொன்றுவேன் உன்னை . . .
அவளின் நான் :
கண் சிமிட்டி மின் இயற்றி எரியவிட்டா ?
கார்கூந்தல்
கயிறு கட்டி தொங்க விட்டா ?
மார்பில் அணைத்து மோகத்தில் எனை மூர்ச்சையாக்கியா?
மருதாணி
இடையில் எனை மயங்கவிட்டா ?
எப்படி நீ கொன்றாலும் , எனக்கு சொர்க்கம் தான் . . .
(அடுத்த காலம் . . . . . )
என்னவள் : ஒரே
இருமலா இருக்கு . . போகவே மாட்டுது . . .
அவளின் நான் :
ஆசைபட்டு ஆட்கொண்டது போலும்,
அப்படியே விட்டு விடாதே செல்லமே . . .
பழகிவிட்டால் உன்னை
விலகிபோகாது
எவையும் இங்கே . . .
என்னைப் போலவே . . . . .
என்னவள் : உடம்பு சரி இல்லைன்னு சொன்னா , அதுக்கும் கவிதையா ??? போடா !!
அவளின் நான் :
இருமலிலும் இசை
கோர்ப்பவள்
நீ !!
தோடி ராகமும் தோற்று போகும்
நீ தும்மினால் . .
(சிறிது நேரத்திற்குப் பின் . . . . )
என்னவள் : saree கட்டி எடுத்தேன் photo . . .எப்டி இருக்குனு சொல்லு
அவளின் நான் :
மலர்களால் கூட
மாராப்பு வேண்டாம் ,
மென்மை அறிந்திட
அழுத்தி பார்க்கும் அவைகளும் . . .
மாற்றிப்பார் எனை உன் மாராப்பாய்
தென்றலையும் தீண்ட அனுமதியேன் . . .
என்னவள் : உத வாங்க போற நீ . .
அவளின் நான் :
உதைப்பது உன்
கால்
தான் எனில்,
உடுத்த போவதில்லை
உடம்பில்
எதையும் . . .
துணி பட்டு உன் கால்
அடி
பட்டு போக கூடும் . . .
என்னவள் :போதும் டா . . . . எனக்கு வெக்கம் வெக்கமா வருது . .
.
அவளின் நான் :
சிந்திய சிரிப்பின் ஊடே
சிதறா வெக்கம் மலர,
சிரம் நீ தாழ்த்திய நொடியில்
சிவந்தது மண்ணும் கண்டு. . .
வஞ்சனை எதற்கு பெண்ணே
வானமும் ரசிக்கட்டும் அதனை,
உயர்த்திடு சற்று உன் முகத்தை
உயிர் பெற வேண்டும் யாவும் . . .
என்னவள் : என்னை நெனச்சி தான் எல்லாம் எழுதுறியா உண்மையாவே ?
என்னவள் : என்னை நெனச்சி தான் எல்லாம் எழுதுறியா உண்மையாவே ?
அவளின் நான் :
எழுதிய வரிகள் யாவும்
உனக்காக மட்டுமே ஜனித்தவை . . .
வரிசையில் இன்னும் அதிகம்
வரத்திற்கு நிற்பதை காண்பாய் . . .
வாசித்து அனுப்பி வை விரைவாய் . . .
(தொடரும் இச் சலசலப்பு . . .)
