Saturday, May 23, 2015

நியாயமா ?





கணையத்தையும், கல்லீரலையும் 
களவாடியதை
கவனிக்காமலும் இல்லை 
கவலை படாமலும் இல்லை  . . .

மூளையையும், மூல நாளத்தையும் 
முடக்கிய போதும்

இரத்தத்திலும் , பித்தத்திலும் 
இரசாயணம் ஏற்றிய போதும் கூட , 

இரக்கம் கொஞ்சம் இருக்கும் உனக்கு 
என்ற சிறிய எண்ணம் எனக்கு  . . .

முழுவதுமாய் நீ ஆட்கொண்டாலும் 
 மூச்சை தானே எடுப்பாய் முடிந்த வரை . . .

பின் ஏன் இந்த மூர்க்கம் உனக்கு  . . ?

தாய்களை தண்டிக்கும் 
தர்மம் எங்கும் இல்லையே ?

கால காலமாய் கண்ணீரையே 
காணும் தாய்களுக்கு 
கடமையாய் கொடுக்கும் உன் பங்கோ இது ?

புண்ணாக்கிய இடங்கள் போதும் 
பச்சிளங்கள் பசியோடிருக்கும்  . . .!

மார்பகம் தேடும் 
மழலையிடம்,
மாற்றாக எதை கொடுக்க இயலும் ?

புற்றுநோயே ! ! !
தீண்டுவதை நிறுத்திவிடுதூர போய்விடு  . . .

மார்பில் விளையாட
காம்பை  கடித்துவைக்க,
பால் பருகி பசியாற
பிள்ளைகளுக்கு மட்டுமே உரிமை கொடுத்துள்ளேன்   . . .

புற்று கட்ட எண்ணினா யெனில் 
 புகைப்போரிடம் காட்டு உன் திறமையை  . . .!