Thursday, May 22, 2014

ஒப்பனைகளின் ஒப்புகை . . .


கவிதை
           உன்  பெயரை உச்சரிக்கும் போது
                 உள்ளூர நான் உணர்வது . . .

சிற்பம் ,
           உன் உருவ நிழல் கூட
                 நிலத்தில் சாய ரசித்தது . . . 

ஓவியம் ,
          உயிர் கொடுக்கும்  தூரிகை  வணங்கி 
                 வாழ்த்தொன்று  வரைந்து கொண்டது  . . .

இம்மூன்றும் உன்னோடு ஒப்பிட 
        இன்று மட்டுமே !

நாளை வேறு என்னவோ !

ஒவ்வொரு நாளும் உன்னோடு
      ஒப்பிடும்  சாக்கில் அவையவை 

தன்னை அழகுபடுத்தி கொள்கிறது !