இனம் புரியா ஓர் இன்பம்
இமைகள் மூடாமல் பல கனவு . . .
மூச்சிலே ஏற்ற இறக்கம்
முகத்திலோ புதுப்புது மாற்றம் . . .
தூக்கமில்லா இந்த இரவு
துடிதுடித்தது உள்ளுணர்வு . . .
படபடத்த இதயம் - பாடி
பறந்த என் இளமை . . .
வறண்டு போன உதடுகள்
வார்த்தை குழறும் நாவு . . .
வறண்டு போன உதடுகள்
வார்த்தை குழறும் நாவு . . .
முத்து முத்தாய் வியர்வை
முதன் முதலாய் புது அனுபவம் . . .
இப்படித்தான் நகர்ந்தது
முதல் வேலை கிடைத்த அந்த முதல் இரவு . , . , !
