Wednesday, June 13, 2012

வைரமுத்துவுடன் சின்ன வம்பு !



ரசிக்க  மட்டுமே., 
வைரமுத்துவுடன் சின்ன வம்பு

காதலித்துப்பார் , கையெழுத்து அழகாகும் ..
தலையெழுத்து என்னாகும் ?

உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் ...
கடவுலாவேனோ ? ஆம் இறப்பவர்கள் கடவுளாவார்கள் என்பது நம்பிக்கை.

உலகம் அர்த்தப்படும் ...
உலகத்தார் கூறிய அறிவுரைகளின் அர்த்தம் விளங்கம்.

இராத்திரியின் நீளம் விளங்கும்...
நிமிடத்திற்கு 50 பைசா என்றால்? இரவு முழுவதும் !!!!!!! நீளம் விளங்கிற்று...

தபால்காரன் தெய்வமாவான்...
தபால் பெட்டி வண்ணத்தில் அவ்வப்பொழுது உடம்பில் வியர்வை வழியும் !

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்...
கண்ணாடி கூட மதிக்காதோ என்னவோ ?

காக்கை கூட கவனிக்காது , ஆனால் உலகமே உன்னை ...
ஆம்! என் காதலி என்னை கவனிப்பதில்லை.

கண்ணிரெண்டும் ஒளி கொள்ளும்...
கடைசி தேதி தொலைபேசி கட்டணம் பார்க்கையில்!

தலையணை நனைப்பாய்...
கடன் கொடுத்தவன் காரி துப்புகையில் வேற என்ன செய்ய ?!

மூன்று முறை பல் துலக்குவாய்...
இதை விட வேறென்ன சான்று வேண்டும் பைத்தியம் என்பதற்கு!!!

காத்திருந்தால் நிமிடங்கள் வருடங்கள் என்பாய் , வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்கள் என்பாய்...
முதல் மூன்று மாதங்கள் முறையே அதுஅடுத்த மாதம் அப்படியே மாறும்!

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா ஒரு உருளை உருள காண்பாய்...
துக்கம் தொண்டையை அடைக்குமென்று சும்மாவா சொன்னார்கள்!

இதயம் அடிக்கடி இடமாறி துடிக்கும்...
இடப்புறம் இதயம் , வலப்புறம் வாயுதொல்லை !

உன் நரம்புகளே உன்னுள் நாணேற்றி அம்புவிடும்... 
தலை தூக்கும் நரம்பு தளர்ச்சி!

காதல் திரைகளை காமம் கிழிக்கும் ...
இதுதான் பலக்காதலின் தொடக்கம், முடிவு இரண்டும் !

ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்...
இதை ஒப்புக்கொள்ளலாம் , அறிவியல் உண்மை.

சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கயே நிச்சயம் ...
இந்த வரியில் முதல் சொல் தேவையற்றது!!