கார்த்திகேயா அழகன்றோ !
கண்டவுடன் பக்தி தூண்டும்
கடவுள் நீ அழகன்றோ !
நெளிநெளி யாய் சிகை கொண்ட
நேசமணி அழகன்றோ !
குவளை மலர் கண்கள் உனது
குளிர்ச்சியூட்டும் அழகன்றோ !
பிறை நுதல் கொண்ட நீர்
பொட்டோடு அழகன்றோ !
முறை கொண்ட முகம் உனது
பட்டு போன்ற அழகன்றோ !
கடுக்கன் அணி கோர்த்த
காது மடல் அழகன்றோ !
இடுக்கண் கலைத்தாடும் - உன்
இறையருள் அழகன்றோ !
அரச கோலம் காணுகையில்
அதிகார அழகன்றோ !
அதிகார அழகன்றோ !
ஆண்டி கோலம் நிற்க காண
கோடி கண்கள் போதாதன்றோ !
சங்கத் தமிழ் சாற்றுகையில்
சப்தம் எல்லாம் அழகன்றோ !
சரித்திர நாயகன் நீ
சாதித்தவை கொஞ்சமன்றோ !
பிறப் பழகு
பிஞ்சு மொழியழகு
முருகன் பெயரழகு
ஆணில் நீ பேரழகு !
வலக்கை வேலழகு ,
இடக்கை கொடியழகு !
வணங்கி உனை பாடுகையில்
வாசம் பொங்கும் என் அலகு !
வாகன மயிலழகு
வானை தொடும் புகழ் அழகு !
வாஞ்சை கொண்டு வணங்குவோர்க்கு
சொர்க்கம் இந்த மண்ணுலகு !
ஆறுபடை வீடு கொண்டாய்
நூறு படை போரில் கொண்டாய்!
ஆணவம் கொண்டதால் தானோ
ஆத்திரத்தில் அசுரனை கொன்றாய் !
ஓங்காரம் ஒன்று போதும்
ஆங்காரம் அழிந்து போகும் !
ஓங்கி விழும் தீமை யாவும்
தாங்கி விழும் உன் அருளால் !
துதி பாட துதி பாட
தூர் எடுக்கும் வரிகள் தந்து
பதி பாட பக்தி பாட
சொல் தந்த தமிழை வணங்கி
என் சிரம் தாழ்த்துகிறேன்- தலைவா
உன் தாள் பணிந்து . . .
அல்லல் போக்கும் நாயகனே ! - என்றும்
அழகிய தமிழ் மகன் நீயே!
கோடி கண்கள் போதாதன்றோ !
சங்கத் தமிழ் சாற்றுகையில்
சப்தம் எல்லாம் அழகன்றோ !
சரித்திர நாயகன் நீ
சாதித்தவை கொஞ்சமன்றோ !
பிறப் பழகு
பிஞ்சு மொழியழகு
முருகன் பெயரழகு
ஆணில் நீ பேரழகு !
வலக்கை வேலழகு ,
இடக்கை கொடியழகு !
வணங்கி உனை பாடுகையில்
வாசம் பொங்கும் என் அலகு !
வாகன மயிலழகு
வானை தொடும் புகழ் அழகு !
வாஞ்சை கொண்டு வணங்குவோர்க்கு
சொர்க்கம் இந்த மண்ணுலகு !
ஆறுபடை வீடு கொண்டாய்
நூறு படை போரில் கொண்டாய்!
ஆணவம் கொண்டதால் தானோ
ஆத்திரத்தில் அசுரனை கொன்றாய் !
ஓங்காரம் ஒன்று போதும்
ஆங்காரம் அழிந்து போகும் !
ஓங்கி விழும் தீமை யாவும்
தாங்கி விழும் உன் அருளால் !
துதி பாட துதி பாட
தூர் எடுக்கும் வரிகள் தந்து
பதி பாட பக்தி பாட
சொல் தந்த தமிழை வணங்கி
என் சிரம் தாழ்த்துகிறேன்- தலைவா
உன் தாள் பணிந்து . . .
அல்லல் போக்கும் நாயகனே ! - என்றும்
அழகிய தமிழ் மகன் நீயே!
