Thursday, July 30, 2015

அக்னி குஞ்சொன்று கண்டேன் . . .



"அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு . . "

எங்கள் தாகம் தணியுமுன் - 
  உங்கள் தேகம் களைத்தீரே  . . . ! ! !

கடைகோடியில் கண் திறந்த 
       அக்னியின் அப்பனே  . . . 
பல கோடி கண்களின் 
      கனவு நாயகரே  . . .

கவி வடிக்க கரைபுரடும் 
        வார்த்தைகள் எங்கே ?
கண்ணீர் முந்தி அவைகளை 
      கரைத்து விட்ட திங்கே ! ! !

செய்தித்தாள் விற்று படித்தது  முதல் 
   செயல் வீரர் ஆனது வரை - உங்கள் 
செயற்கரிய செயல்கள் எல்லாம் - என்றும் 
   சாத்தியமில்லா சாதனைகளே  . . . 

இனிமைக்கும் , எளிமைக்கும் - புது 
  இலக்கணம் இழைத்தவரே ! ! ! 
அறிவுக்கும் ஆக்கத்திற்கும் - புது
    விதிமுறை வகுத்தவரே ! ! !

சவால்களை சந்திக்கவும்,
 சமயோகிதமாய் சிந்திக்கவும் ,
சாமானியம் சொல்லி தந்த - எங்களின் 
   சகாப்த சாரம் நீங்கள்  ! ! ! 

கறை படிந்த கறை வேட்டிகளும் 
   மக்களை நினையா மந்திரிகளும் 
இன்ப நலமான தங்கள் 
   இல்வாழ்க்கையில் இருக்கையில்  . . . 

மக்களுக்காக மத்தியை ஆண்ட
       மக்கள் புதல்வரே  . .
மாமனிதரே  . . . மகா ஆத்மாவே ! ! !

உங்கள் சாதனைகளையும் - நீவிர்
  கொடுத்த போதனைகளையும்
பட்டியலிட பக்கங்கள் போதாது 
  பட்டிதொட்டியும் அதை மறந்துபோகாது   . . .

இளைஞர்கள் எங்களின் 
     எழுச்சி கீதம் நீர்  . . .
பிஞ்சு குழந்தைகளின்
     கொஞ்சல் கீதம்  நீர்  . . .

கொண்ட களித்த 
     பாத்திரங்கள் எத்தனை ! ! !
 கொடுத்திவிட்டு போன
    சூத்திரங்கள் தான் எத்தனை ! ! !

தாங்கள் கொண்ட
    தன்னம்பிக்கைக்கும்,
தாங்கள் காட்டிய 
    தன்னடக்கத்திற்கும்,
தலை தாழ்த்தா
   தலை தான் உண்டோ ? ? ?

கலைகளின் நாயகரே,
  அறிவியலின் ஆசிரியரே,
புகழும் உங்கள் பெயரை 
    கொண்டு புகழ்ச்சி பெரும் ! ! !
விருதும் உங்கள் மலர்கால் 
   பணிந்து மதிப்பு பெரும் ! ! !  

விதைத்து விட்டு போகிறீர் 
   விளைவோம் என்ற உறுதியோடு  . . .
நீர் வார்க்க நீவிர் இருந்தால் 
  நேர் போகும் எங்கள் கிளைகளும் . . . 

பெயர் மட்டும் போதும் ஐயா - உங்கள் 
  பெயர் மட்டுமே போதும்  . . .

பற்றிக்கொண்டு பாளை யிடும்
         பசுங்கொடி போல்
  தொற்றிக்கொண்டு தொடர்வோம் 
                 உங்கள் வழியில்  . .