"அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு . . "
எங்கள் தாகம் தணியுமுன் -
உங்கள் தேகம் களைத்தீரே . . . ! !
!
கடைகோடியில் கண் திறந்த
அக்னியின் அப்பனே . . .
பல கோடி கண்களின்
கனவு நாயகரே . . .
கனவு நாயகரே . . .
கவி வடிக்க கரைபுரடும்
வார்த்தைகள் எங்கே ?
கண்ணீர் முந்தி அவைகளை
கரைத்து விட்ட திங்கே ! ! !
செய்தித்தாள் விற்று படித்தது முதல்
செயல் வீரர் ஆனது வரை - உங்கள்
செயற்கரிய செயல்கள் எல்லாம் - என்றும்
சாத்தியமில்லா சாதனைகளே . . .
இனிமைக்கும் , எளிமைக்கும் - புது
இலக்கணம் இழைத்தவரே ! ! !
அறிவுக்கும் ஆக்கத்திற்கும் - புது
விதிமுறை வகுத்தவரே ! ! !
சவால்களை சந்திக்கவும்,
சமயோகிதமாய் சிந்திக்கவும் ,
சாமானியம் சொல்லி தந்த - எங்களின்
சகாப்த சாரம் நீங்கள் ! !
!
கறை படிந்த கறை வேட்டிகளும்
மக்களை நினையா மந்திரிகளும்
இன்ப நலமான தங்கள்
இல்வாழ்க்கையில் இருக்கையில் . . .
மக்களுக்காக மத்தியை ஆண்ட
மக்கள் புதல்வரே . .
மாமனிதரே . . . மகா ஆத்மாவே ! ! !
மாமனிதரே . . . மகா ஆத்மாவே ! ! !
உங்கள் சாதனைகளையும் - நீவிர்
கொடுத்த போதனைகளையும்,
பட்டியலிட பக்கங்கள் போதாது
பட்டிதொட்டியும் அதை மறந்துபோகாது
. . .
இளைஞர்கள் எங்களின்
எழுச்சி கீதம் நீர் . . .
பிஞ்சு குழந்தைகளின்
கொஞ்சல் கீதம் நீர் . . .
கொண்ட களித்த
பாத்திரங்கள் எத்தனை ! ! !
கொடுத்திவிட்டு போன
சூத்திரங்கள் தான் எத்தனை ! ! !
பாத்திரங்கள் எத்தனை ! ! !
கொடுத்திவிட்டு போன
சூத்திரங்கள் தான் எத்தனை ! ! !
தாங்கள் கொண்ட
தன்னம்பிக்கைக்கும்,
தாங்கள் காட்டிய
தன்னடக்கத்திற்கும்,
தலை தாழ்த்தா
தலை தான் உண்டோ ? ? ?
தன்னம்பிக்கைக்கும்,
தாங்கள் காட்டிய
தன்னடக்கத்திற்கும்,
தலை தாழ்த்தா
தலை தான் உண்டோ ? ? ?
கலைகளின் நாயகரே,
அறிவியலின் ஆசிரியரே,
புகழும் உங்கள் பெயரை
கொண்டு புகழ்ச்சி பெரும் ! ! !
கொண்டு புகழ்ச்சி பெரும் ! ! !
விருதும் உங்கள் மலர்கால்
பணிந்து மதிப்பு பெரும் ! ! !
பணிந்து மதிப்பு பெரும் ! ! !
விதைத்து விட்டு போகிறீர்
விளைவோம் என்ற உறுதியோடு . . .
நீர் வார்க்க நீவிர் இருந்தால்
நேர் போகும் எங்கள் கிளைகளும் . . .
பெயர் மட்டும் போதும் ஐயா - உங்கள்
பெயர் மட்டுமே போதும் . . .
பற்றிக்கொண்டு பாளை யிடும்
பசுங்கொடி போல்
பற்றிக்கொண்டு பாளை யிடும்
பசுங்கொடி போல்
தொற்றிக்கொண்டு தொடர்வோம்
உங்கள் வழியில் . . .
உங்கள் வழியில் . . .
