பால் பிறை பவள நெற்றியின்
பதுங்கு துளையில் பொங்கி முளைத்திடும்,
ஒன்று, இரண்டு, ஒன்பது, நூறும்
ஒன்றாய் திரண்டு, நின்றது துளியாய்.
. .
கோர்த்து அணைத்து கூடிய துளிகள்
கொஞ்சி பேசி நகர்ந்தது மெதுவாய்,
பொட்டின் சாயம் கொஞ்சம் பூசி
பெயர்ந்தது இரண்டு புருவங்க ளிடையே.
. .
மூக்கின் சறுக்கில் அடியடியாய் இறங்கி
முன்பார்த்த நுனியை தொட்டதும் போதும் . . .
கானா எதையோ கண்டது அங்கு
கனலை கொண்ட பழத்தினைப் போல. .
குழைத்து வார்த்த குங்கும உதட்டை
தொட்டு பார்க்க கைகளை நீட்ட . . .
அதிர்ந்த வேகத்தில் அடுத்த நொடியே
பக்கவாட்டில் துளி, பாய்ந்து இறங்கிட
அதிர்ஷ்டமில்லா வியர்வை இறுதியில்
அவள் கன்னம் வருடி கரைந்தோடியது . . .
கோபத்தில் வேகத்தை கூட்டிய
துளியோ
கோரமாய்
முன்னேறி குரல்வளை தொட்டது
ஏற்கமுடியா எண்ணக்குலைவில்
தவிர்க்கமுடியா
தற்கொலை முடிவோடு . . .
தொண்டைக்குழி தாண்டிக் குதித்து,
தொப்பென
விழுந்தது சீண்டா மலர்களிலே . .
சிறுதிடர் கடந்து சிவந்த முகட்டின்
காம்பின்
விளிம்பினில் கரங்கள் விரித்து
சிரம் அதை தாழ்த்தி சீராய்
கீழ் பாய்கையில்
சிந்து
மலரின் சிலையிடை கண்டது,. . . .
மலரின் நடுவினில் சிறு மடுவையும் ரசித்தது
. . .
இறந்தோம் என்று எண்ணிய போது
இடைப்பட்ட
தொடையில் வழுக்கி விழுகையில்
போதும் எனது பிறப்பின் பயனென - அவள்
பாதம்
தொட்டு பயணத்தை முடித்தது . . .
சற்று முன்பு முளைத்தாலும்
சாதித்துவிட்டது வியர்வை துளி . . .
