ஒரே செடியில் தான் மலர்ந்தது
ஒரே
நாரில் தான் தொடுக்கப்பட்டது !
ஒரே கூடையில் தான் அமர்ந்து சென்றது
ஒரே
கையால் தான் அளக்கவும் பெற்றது !
ஒரே இலைக்குள் தான் சுருடவும் பட்டது
ஒருவனிடம் தான் விலையும் போனது . . .!
முதல் இரண்டு முழம் சாமிக்கும்
அடுத்த இரண்டு
முழம் மனைவிக்கும் என
முறையாய் தான் முழம் அளந்தும் அளிக்கப்பட்டது . . .
அப்படி இருக்க !
அப்படி இருக்க !
ஒரு சேர பக்தியையும் , காதலையும் பரிவர்த்தனை செய்ய . . .
எப்படி முடிந்தது மல்லிகையால் ?
