Wednesday, August 14, 2013

எம்மண் மாண்டதும் , மீண்டதும் ! ! !

                                 

                                      எம்மண் மாண்டதும் , மீண்டதும் ! !






அணு  பிளந்து,  அண்டம் வளர்ந்து 
          கண்டம் பிரிந்து,  கருவாய்மாறி
கால மாற்றத்தால் கழனியோடு உருவான 
          கடவுளின் குழந்தை எம்பாரதமே . . . 

அனைதுலகுக்கும் அறிவியல் புகட்டி 
            அர்த்தசாஸ்திரம் முறையாய் இயற்றி 
ஆள்வதெற்கென்றெ பிறந்த நாம்  - எப்படி 
           ஆனோம் அடிமையாய்., ?


விற்க வந்தவன் விலை பேசிட  - விற்று 
         விட்டோம் நம் மண்ணை 
விலை போனது நம் அன்னை . . .

ஒண்ட வந்த பிடாரியொன்று ஊர்
          பிடாரியை விரட்டிய கதை 

டச்சுகளும் , தானிஷ் களும் 
       பிரெஞ்சுகளும், பிரிட்டிஷ்களும்
பிணம் திண்ணி கழுகுகளாய் 
       பிரித்தெடுத்தனர் எம்மண்ணை  . . . 


காற்றுக்குக் கப்பம் கட்டினோம் 
        கஞ்சி குடிக்க வரி கட்டினோம்,

காதலன் காதலியை பார்க்க ,
        கட்டிலில் கணவனோடு படுக்க,

குழந்தைகள் கூடி விளையாட 
        குலப்பெண்கள் மஞ்சள் நீராட,

அனுமதி வேண்டி நின்றோம்  - ஆம்  
         அடிமையாய் வாழ்ந்து வந்தோம் ! ! 


அறத்திற்கு பேர் போனோம் 
         ஆக்கத்திற்கு பேர் போனோம்,

வீரத்திற்கு பேர் போனோம் 
         விருந்தோம்பலுக்கும்  பேர் போனோம் 

அத்தனை உணர்வுகள் இருந்தும் ஏனோ 
         பயனின்றி வீணாய் போனோம் . . . 


காயம்பட்ட கத்திகள் எத்தனை ,
        கணவன் இழந்த மனைவிகள் எத்தனை  - ஒற்றை 
குமாரனை ஒளித்து வைக்காமல் 
        போருக்கு அனுப்பிய பெண்கள் எத்தனை . . . 


வெள்ளையனே ,

கத்திக்கு கத்தி என்றால் எங்கள்முன் 
காய்ந்து போன எள்ளடா நீ ,
கருவில் பெற்ற பயிற்சி  போதும் - 
      உங்கள்  கரு அறுத்து கழுகுக்கு போட . . . 


தூர இருந்து தூக்கி எறிந்த தோட்டாவும் 
        பொசுங்கி வந்து பீரிட்ட பீரங்கியும்  
எம்மூர் நாயும் கையாளும் சில முறை 
        பேயும் கையாளும்  . . . 
         

அரசன் முதல் ஆண்டி வரை ,
        குழந்தை முதல் குமரி வரை ,
குருதிகள் எத்தனை எம்மண்ணை 
        குளிப்பாட்டி கொஞ்சியிருக்கும் . . . 

எதற்கும் அஞ்சியவரும்  அல்ல  - நம்மை
     எவரும் மிஞ்சியவரும் அல்ல. . .  

எண்ணற்ற பெரியோரும் -  எதிர்த்து
       நின்ற இளைஞரும்
மாண்டு மடிந்த இம்மண் 
        மீண்டது எப்படி பாரீர் . . . 

போஸ் தலைமையில் போர்படை ஒன்று 
        கத்தி விடுத்தது, தோட்டா தொட்டது . . .
திரட்டிய படைகள் நடப்பதை கண்டு 
         காலனி படைகள் கண்தூக்கம் இழந்தது  . . . 

கல்லடி படாமல் கண்ணடி பட்டதோ ! 
    கண்ணாடி அணிந்தவன் காணாமல் போனான் . . . 

தலையின்றி படையும் படுத்தது போரில் 
    கடைசி முயற்சியும் முறிந்தது  போரில்  . . . 

இரு நூறு ஆண்டுகள் 
        இருளில் கழிந்தாலும்  . . .
இடுப்பில் துணியோடு 
       ஒளியாய் ஓர் ஆத்மா ! ! !

கத்தி பிடித்த கை  - கதர் 
    இராட்டை சுற்றிட 
ஓங்கிய கைகள் யாவும் 
     ஒடுங்கி போய் நின்றது  . . . .


அகிம்சை ஆயுதம் 
      மீட்டது மண்ணை, 
அடிமை உடைத்து  - உயிர்
      பெற்றது அன்னை  . .

பெற்ற சுதந்திரம் இருளில் என்றாலும்  
      ஏற்றம் என்றுமே விடியலை நோக்கி . . . 

பெற்றது அவர்களாயின் 
        போற்றிக் காப்பது நாமாகட்டும்  . . . . .

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். . .