என் தங்கைக்காக தொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு சரம் - அது
என் கையால் தொடுக்கப்பட்டது எனக்கு கிடைத்த வரம் ......................
வரமானவள் !!!!!!!
தாய் தந்த பரிசாக
எனக்கு கிடைத்த வரமாக,
முன் பின் பிறந்தாள் தமக்கையாய்
அன்பில் என்றும் அன்னையாய்.....
கண் திறந்து காலம் முதலாய்
கரம் பிடித்து நாட்கள் தொடர்ந்து,
ஓடி விளையாடிய நாட்களும்,
கூடி கொண்டாடிய இடங்களும்
மரணம் தீண்டும் வரை
மனதினில் நிற்கும்,
மறு ஜென்ம வேளையிலும்
மறக்காமல் இருக்கும்.
பங்கிட்டு உண்கையில் மட்டும்
பகைவராய் இருவரும் அவ்வயதில்..
அளவாய் சண்டையிட்டதும்,
அளவுக்கதிகமாக அன்பு வைத்ததும்
உன்னிடம் மட்டுமே!
நெய் முறுக்கோ, நிலக்கடலையோ
இலந்தை வத்தலோ, ஈச்சம்பழமோ
பகிர்ந்து தானே உண்பாய் - எப்படி
பாசம் அதிகம் கலப்பாய்!
வளர்ந்த நாட்களிலும்,
வாழ்ந்த காலங்களிலும்
பக்க துணையாய் நீயே,
பாசத்தில் நீ என் தாயே!
பகிர்ந்துண்டு உண்பதிலும்
பாசம் காட்டி வாழ்ந்ததிலும்
பெற்றவளின் நிகர் நீயே
மற்றெல்லாம் வெறும் மாயே
தங்கமும் மதிப்பில்லை என்
தமக்கைக்கு முன்னால்,
தாமரையும் அழகில்லை என்
தாரகைக்கு முன்னால்....
தவம் செய்யாமல் கிடைத்த
வரம் நீ எனக்கு......!

2 comments:
Thaamaraiyum azhagillai en thaaragaikku munnaal..
en thaaragai nu kaathaliya than kuripiduvom. intha thaaragai, en thamaikai nu sollalam :)
Thaaragai na PONNU Machi., Kaathali nu meaning varaathu, entha ponna venunaalum Tharagai nu sollalaam., Thaaragai, kaarigai, kaani, pen etc., I think Almost nine names are available for girls.,
Post a Comment