சின்டல்
அக்டோபர் 1 ,
வேலையில்லா வெட்டி இளைஞரின்
வேலையில்லா வெட்டி இளைஞரின்
முகவரியில் மூத்தவனாய் !
நடந்து நடந்து நரம்பு அறுந்து
ஓடாய் தேய்ந்து
உருகுளைந்தவனாய் !
நண்பன் ஒருவன் நல்வழி கூற -
முயன்று பார்க்க முயற்சி
செய்தேன் அன்று !
குளிர்ந்த மாதம் பெயரில் கொண்டு , குறுகுறு பார்வை கண்ணில்
கொண்டு
குழந்தை மனதை தன்னுள் கொண்டு , கேள்விதனை கணைகளாய் கொண்டு
-
துளைத்தெடுத்தான் ஒருவன் என்னுள் தோண்டி யெடுத்தான்
தலைவன்!!
ஒன்றுமில்லை உள்ளே வருகையில் - இன்று
போதவில்லை என் உணர்வினை விளக்கையில்..
போதவில்லை என் உணர்வினை விளக்கையில்..
நட்பு , பகை , சுகம் வலி,
கூடல், ஊடல், கொஞ்சல் , கெஞ்சல்,
விருப்பு , வெறுப்பு, புன்னகை , கண்ணீர்,
ஏற்றம் , ஏமாற்றம், சந்தர்பம், சமாதானம்,
இன்னும் எத்தனையோ இன்று! - என்
காலப்பதிவில் கரையும் கணங்களாக ......
இவைகளில்,
விளையாட்டை சில , வீம்புக்காக சில
யதார்த்தமாய் சில , எதிர்பார்ப்புடன் சில ......
என்னோடு உறவுகளாய் உணர்வுகளை
பகிர்ந்த சிலரின் உரிமம் என்னுள்.....
பிறப்பால் ஒன்றாய் அல்ல ஒருவன் - உடன்
பிறப்பாய் இருந்து சென்றானவன் ,
சுட்டியாய் ஒருத்தி , குட்டியாய் ஒருத்தி
புட்டி போல் ஒருத்தி, தங்கக்கட்டி நிறம் ஒருத்தி
தேன் கிண்ணம் ஒருத்தி, தரையில் ஒரு அன்னம் ஒருத்தி
தமக்கையாய் ஒருத்தி , தளிராய் வந்து சேர்ந்தவள்
ஒருத்தி..........
முதலணி முற்றுபெறவில்லை, மற்றொரு அணி மாற்றம் கேட்டது
வலையொன்று புள்ளியோடு என்னை
வளைத்து போட்டது இறுதியில் ..

No comments:
Post a Comment