தாய்ப்பால் கிடைக்க செய்தேன் !
தலை கோத விரல்கள் கேட்டான்
தாய் மடி பரிசளித்தேன் !
பசி என்று வேண்டினான்
பால் சோறு ஊட்ட வைத்தேன் !
படிப்பறிவு வேண்டி நின்றான்
பாடசாலை செல்ல வைத்தேன் !
பட்ட மேற்படிப்பு கேட்டான்
பகுத்தறிவும் புகுத்தி வைத்தேன் !
படிப்புக்கேற்ற வேலை வேண்ட
மடி கணினியோடு பணி கிடைக்க செய்தேன் !
வசதியாய் வாழ்க்கை விரும்ப
வங்கி கணக்குகளில் கோடியை நிரப்பினேன் !
வங்கி கணக்குகளில் கோடியை நிரப்பினேன் !
தூர தேசம் தீராத ஆசை என்றான்
தாரமும் தந்து, தூரமாய் அனுப்பினேன் !
அவனுக்காக , ஆசை தீர
அனைத்தையும் வேண்டிக்கொண்ட அவன் ,
அவனுக்காய் வாழ்ந்தவளின்
ஆயுளை இதுவரை கேட்டதில்லை !
குறைந்த பட்ச வேண்டுதலில்
அன்னை ஆயுள் அடங்கியிருந்தால் ,
குமுறி அழும் நிலையை மாற்றி
கூட்டியிருப்பேன் அவள் நாட்களை !
சவமாய் சாய்ந்து கிடக்கும்
அன்னை பாதம் கட்டிக்கொண்டு,
சபிக்கிறான் என்னை கடவுளா
நீ என்று . . .!
அருகில் ஆன்மாவை அமர்ந்து
அவள் இன்னும் வேண்டுகிறாள்,
மகனின் ஆயுள் மட்டும் . . .
தாரமும் தந்து, தூரமாய் அனுப்பினேன் !
அவனுக்காக , ஆசை தீர
அனைத்தையும் வேண்டிக்கொண்ட அவன் ,
அவனுக்காய் வாழ்ந்தவளின்
ஆயுளை இதுவரை கேட்டதில்லை !
குறைந்த பட்ச வேண்டுதலில்
அன்னை ஆயுள் அடங்கியிருந்தால் ,
குமுறி அழும் நிலையை மாற்றி
கூட்டியிருப்பேன் அவள் நாட்களை !
சவமாய் சாய்ந்து கிடக்கும்
அன்னை பாதம் கட்டிக்கொண்டு,
சபிக்கிறான் என்னை கடவுளா
நீ என்று . . .!
அருகில் ஆன்மாவை அமர்ந்து
அவள் இன்னும் வேண்டுகிறாள்,
மகனின் ஆயுள் மட்டும் . . .

No comments:
Post a Comment