வண்டுகள் வாசம் செய்யும்
வசந்த மலர்கள் வசிக்கும் வனத்தில்,
கண்டு
எதையும் அறிய முடியா - அக்
காரிருள்
ராத்திரி பொழுதில் . . .
படை போல் வரிசை கட்டி
படர்ந்து
நிற்கும் மரங்களின் கீழே,
நெளி நெளியாய் வளைந்து செல்லும்
- தார்
சாலையில்
இரு உயிர்களின் பயணம் . . .
கைகள் இரண்டும் கோர்த்து கொண்டும்
கதைகள்
ஏதோ பேசி கொண்டும்,
கண்கள் நான்கும் பார்த்து கொண்டும்
காதல் பரி மாறி கொண்டும்,
கணங்கள்
கடந்த பொழுதறியாமல்
மனங்கள்
இரண்டும் மயங்கிய நிலையில் . . .
மொட்டினை
முகர்ந்து செல்லும்
மாலை நேர மனிகாற்றுப் போல்,
பட்டுடல்
தொட்டு பார்க்க
முனைந்தஅவன் கைகள் கண்டு,
வெடுக்கென
தள்ளி விட்டு - அவள்
வெகுளியாய்
விலகி விழ,
திடுக்கென
துள்ளி எழுந்து
திண்டாடிய
அவள் உடலை,
படக்கென
கைகளில் ஏந்தி
பந்தைபோல்
விரல்களால் தாங்கி . . .
இடைகோர்த்து பிடிக்க அவன்கை,
இன்பத்தில்
நாணிய அவளை !
பதம் பார்த்து பற்கள் பதிக்கும்
பழம் கொண்ட அணில் போல்
அவனும்,
இடம் பார்த்து இதழினை பதிக்க
- அவளோ
தடையின்றி
தந்தாள் தேனை . .
No comments:
Post a Comment