Saturday, February 14, 2015

நாள்காட்டியில் ஒரு நாள் ! ! ! - பிப் - 14



கவிதைகள் சில 
       கருபெற்றிருக்கும் 
காரணமின்றி பல 
       கருகிபோயிருக்கும்,

மூச்சுகள் சில 
      முக்தி பெற்றிருக்கும்
மூர்க்கமாய் பல 
      முடிந்து பொயிருக்கும் ,

வானமாய் சில 
      விரிந்து போயிருக்கும்
வனமாய் பல 
      இருண்டு போயிருக்கும்,

வெட்கங்கள் சில 
      வெகுமதி பெற்றிருக்கும் 
வேதனையில் பல 
      விரக்தியாயிருக்கும்,

முகங்கள் சில 
       மெருகேறியிருக்கும் 
முடிகளால் பல 
       மூட வேண்டியிருக்கும்,

ரோஜாக்கள் சில 
      கூந்தல் ஏறியிருக்கும்
 ராஜாக்கள்  கையோடு பல 
       குப்பையில் சேர்ந்திருக்கும் 

இங்கு முதல் வரிகள் யாவும்  முகவரியும் அல்ல 
     அடுத்த வரிகள் அனைத்தும் முடிவுகள் அல்ல .,

நீளட்டும் இந்நாள் பல நினைவுகளோடு 
           இன்னும் பல வருடங்கள் . . . . . .

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ....................





No comments: