Tuesday, March 10, 2015

மகளிர் தின வாழ்த்துக்கள் . . .


அணுவில் தொடங்கி 
  அண்டம்  கலக்கும் - உயிரை 
பிண்டம் கொடுத்து 
    பெற்றொதொரு உறவு . . .

பிண்டம் கொண்டு 
      பிறந்த பின்னே -  தமையாள் 
செந்நீர் சொந்தம் 
     சேர்ந்ததோர் உறவு . . .

செந்நீர் சொந்தம் 
    சேரா ஒன்று - உடல் 
சார்ந்து உயிர்
      கலந்ததொரு உறவு . . . 

கொஞ்சி மகிழ - கொண்ட
  நெஞ்சம் நெகிழ 
பிஞ்சு மகளாய் 
   பிறந்ததொரு உறவு . . .

பந்தம் இன்றி 
      பேசிப் பழகி 
தோழமை கொண்டு 
     தொடங்கியதோர் உறவு . . . 

அத்தனை உறவும் 
    அடங்கிய தவளில் - இன்னும் 
எத்தனை சொல்லிட 
   விளங்கிடும் பெருமை . . . 

"மாதராய் பிறந்திடவே - நல்ல 
    மாதவம் செய்திட வேண்டுமம்மா ! ! ! "

சங்க கால
    சபைகளில் பார்த்தோம் 
பண்டைய கால
   போர்களில் பார்த்தோம் . . .

 மடமையும், சடங்கும் 
  மறைத்திட்ட உண்மை . . .
ஆதிக்கம் செலுத்தி
   அணைத்திட்டதவளை  . . .

கைகள் மறைத்தால் 
    கதிரவன் மறையுமா ?
கண் மூடி கொண்டால் 
    கணங்கள் தான் இருட்டாகுமா ?

தக்கன பிழைத்துவாழ்தல்
   தமக்கென கொள்ள முடியாது  இனி  ! !

மூடிய கதவுகள் - எல்லாம் 
   முறியடித்தாயிற்று . . .! !
முடக்கிய கைகள் - என்றோ 
   முடுக்கி விட்டாயிற்று  . . .! !

கழனி முதல்
    கணினி வரை . . .
முன்னுரை எழுதி 
     முன்னேரிவிட்டனர்  . . .
  
செய்த செயல் 
   யாவுமே சாதனையே பெண்ணே   . . .

துணுக்கை தான் இது
   தொடர்ந்தால் இன்னும்  நீளும்  . .  .
உன் அன்பை போலவே . . . . 

No comments: