அன்புள்ள அம்மா , அப்பா !
ஆருயிர்
நண்பா !
மதிப்பிற்குரிய
மாமா !
மரியாதைக்குரிய
மாப்பிள்ளை !
என்
உயிர் காதலியே !
என்றும்
இனிய காதலா !
மடிந்து
போன வாக்கியங்களை - அந்நாளில்
மடியில் சுமந்த கடிதங்களே . . . !
உணர்ச்சிகள் ஊட்டிய வரிகளும்
கனவுகள் கடத்திய காகிதமும்,
அறிவியல் ஆ(தீ)க்கத்தால்
அழிந்து போன உணர்வுகள் போல,
காணாமல் போன என் இனிய கடிதமே உனக்கு
கண்ணீருடன் அஞ்சலி . . .

No comments:
Post a Comment