இரு வேறு கொடிகள் , இரு வேறு பூக்கள்
இலைகளின் இடையே ஒன்றாய் மலர்ந்தது,
காற்றில் ஆடி, கவிதை பாடி
மகரந்தம் தூவி, மழைகளில் நனைந்து என
மறக்க முடியா நாழிகைகள் பல
குறிப்பேடுகளில் குடியேறியது . . .
முகம் பதிந்து, முத்தம் பகிர்ந்து
தோளில் சாய்ந்து தொடர்ந்தது காதல் . . .
ஆடி பாடி அகம் மகிழ்ந்து
அணைத்துக்கொண்டு அரங்கேறியது காதல் . . .
அத்தனையும் ஆசை படவில்லை ஆண்பூ
உயிருக்கு மேலாக அதனுள் பெண்பூ . . .
செழிப்பாய் ஒரு கொடி , சிவந்த பூ கொண்டு
இரண்டின் இடையே புதிதாய் மலர்ந்தது ,
தாங்கிய கொடியின் தவிப்பினை போக்க
சேர்ந்தது பெண் பூ, புது கொடி பூவோடு . . .
சொந்த காலில் நின்றாலும் ஆண் பூ
செழிப்பின்றி போனதால் வாழ்வின்றி போனது . . .
புது பூவோடு மனம்கோர்த்த பெண்பூ
கவிதை பாடிட, மகிழ்ந்தது ஆண் பூ ,
காலை புணர்ந்தது , காற்றும் அடித்தது
கண் விழித்த போது அங்கே
கருகி கிடந்தது ஆண் பூ கீழே . . .

No comments:
Post a Comment