தாழம்பூ தண்டினை கொய்தேன்,
தாழ்வாரம் அதைகொண்டு படைத்தேன் . . .
தாழ்வாரம் அதைகொண்டு படைத்தேன் . . .
கார்கால காற்றினை கவர்ந்தேன்
கயிறினை அதனினில் திரித்தேன் . . .
பஞ்சது பாரமாய் இருக்கும்
பட்டுடல் பட்டிடின் அதிலே,
பனித்துளி போர்த்திய பூவின் ,
மணி இதழ் தொட்டிலுக் கிட்டேன் . . .
இவை செய்தும் அவளதை விரும்பா
முடி கொண்ட மார்பினில்
சரிந்தாள் - என்னில் . . .
கோதிய கரங்களை கொண்டு
குளிர்ந்த அவள் சிரத்தினை
நிமிர்த்த . . .
கோடி கொட்டி கொடுத்தாலும் தகுமோ? உன்
மேடு கொண்ட மார்புக்கு உலகில் . . .
சொர்கமே இதுவன்றோ எனசொல்லி
சொக்கினாள் மறுபடி நெஞ்சில் . . .

No comments:
Post a Comment