அம்மாவோடு அலைபேசியில்
அந்தி நேரம் பேசுகையில் . . .
அரசல் புரசலாக விழும்
ஆட்டுக்குட்டி
சத்தமும்,
குப்பைகள் கிளரும் கோழி
குஞ்சுகளின்
கொஞ்சலும் ,
கூட்டினில் கோஷமிடும்
குருவிகளின் இரைச்சலும்,
சொந்த ஊர்
சோலைக்குயில்
பாட்டும்,
இன்னும், இன்னும் பரவசமடைய வைக்கிறது . . .
No comments:
Post a Comment