ஒரு ஏழை தன் தாய்க்கு எழுதும்
கடிதம் . . .
அன்புள்ள
அம்மாவுக்கு ,
நல்லா இருப்பனு நம்புறேன் !
கோடை காலம் முடிஞ்சிருச்சி
பருவமழை தொடங்கிருச்சி
பார்த்து
இருந்துக்கம்மா
பழையசோறு விட்டுரும்மா . . .
கிலோ ஒரு
ரூபாய்க்கு
கெடைக்குதுன்னு நெனைக்காத
ரேஷன்
கடை அரிசி வச்சி
ஓன் வயித்த கழுவாத . . .
வாய்வு ஏறிடும்
வயிறெல்லாம் வீங்கிவிடும்
கால்
கை இழுத்துகிடும்
கண்ணெல்லாம் மங்கிவிடும் . . .
மாசம் மொத
வாரம்
வந்துடும் என் ஊதியமும்
ஆழாக்கு
அரிசி வாங்கி
அடுப்பெரிச்சி சாப்பிடும்மா . . .
முந்தானை
கிழிஞ்ச சேலை
தலை தொடைக்க வச்சிக்கோ
முறையா கட்ட ஒரு
பருத்தி சேலை எடுத்துக்கோ . . .
கீத்து கிளிஞ்சிருக்குமே
- கொண்ட
கம்பும் மச்சிருக்குமே
ஓலை ஒடுக்கிவிட்ட
பாலை
நாறும் அருந்திருக்குமே . . .
ஓட்டை ஒடிசலிலே
ஒழுகி
மழை ஊத்துசின்னா
கடனா கீத்து
வாங்கி - கம்புல
சும்மா சொருவிடும்மா . . .
அடுத்த மாசம்
எப்படியும்
அதுக்கும் சேர்த்து அனுபுச்சிடுவேன் . . .
வயக்காடு
வச்சவனேல்லாம்
மழை பேய தவமிருப்பான்
நாம நனைவோமுனு
நாவிட்டு சபிச்சிராத . . .
தூறல் விழுந்தாக்க
தொவட்டிக்கமா துணி எடுத்து
சாரல் வரும்
நேரம் கதவை
சாத்திக்கமா சாக்கெடுத்து
மொழுகி வச்ச
திண்ணையெல்லாம்
மொதிச்சி போகும் தண்ணி பட்டா
பொடலை மட்ட
கட்ட வச்ச
படுதா போட்டு மூடிக்கமா . . .
ஒத்தையா
பெத்த புள்ள
உனை பிரிஞ்சி வாழ்ந்தாலும்
உன்னையே
நெனச்சிருப்பேன்
உனக்காகவே வாழ்ந்திருப்பேன் . . .
கஷ்டம் ஏதும்
எனக்கில்லை - உன்னை
கவனிக்கத்தான் ஆளில்லை
காலம் நேரம்
கூடுமம்மா - நாம
கஷ்டமெல்லாம் போகுமம்மா
பார்த்து
இருந்துக்கமா . . .
---இப்படிக்கு
உன் அன்பு
மகன் குபேரன்

No comments:
Post a Comment