உனக்கான பசி - நீ
உண்டால் தான் தீரும்
உனக்கான துயர் - உன்னால் மட்டுமே
உள்ளுணர முடியும் .
. .
துடைக்க கரங்கள் மறந்தபோது
துளி துளியாய் கண்ணீர் எதற்கு .
. .?
மூச்சடக்க முடிந்த மட்டும் - உனை
மூழ்காமல் காக்க நினைப்பர்
மூச்சவர்க்கு தேவையெனில் - உன்
மேல் தூக்கி கால் வைப்பர் .
. .
அன்பு, பாசம், காதல்
பயிரிட்டது பலனுக்காகவே . . .
கஞ்சி, காசு, காமம்
அறுவடையில் நீ அறிவாய் !
அன்பை அள்ளிக் கொடுத்தாயின்
அடிமையென நகைப்பர் . . .
பாசம் வைத்தாயின் உன்னை
பணிய வைத்து அழகு பார்ப்பர் .
. .
எரிக்கப்பட்ட தீக்குச்சிகள் - தூர
எறியபட்டவையே அன்றி ஏற்கப்பட்டதன்று !
பற்றவைக்கும் வரை மட்டுமே - நீ
பந்தமாய் இருப்பாய்
பற்றியதும் விரலுக்கும் - நீ
பாரமென ஆவாய் !
உலக நியதியை உன்னிப்பாக
எண்ணிப் பார்
நல்லவன் வீழ்த்தப்படுவான்
வல்லவனே வாழ்தப்படுவான் !
நிழலும் உன்னோடு
நிஜமாய் நடைபோடுவதில்லை . . .
வெளிச்சம் விளக்கில் இல்லையேல்
நிஜமாய் நடைபோடுவதில்லை . . .
வெளிச்சம் விளக்கில் இல்லையேல்
வெற்றிடம் மட்டுமே உன்னோடு அங்கே !
எண்ணிக்கொள் ,
வாழ வக்கத்து வாழ்பவனுக்கு
வானளவு வாய்ப்புகளும் சிறு வைக்கோல் பதர் தான் .
. .
வாழ்வில் வாஞ்சை கொண்டு போராடி பார் - சிறு
வைக்கோலும் உனக்கு வாள் போல் நிற்கும். . .
வைக்கோலும் உனக்கு வாள் போல் நிற்கும். . .
உனக்கான பலமோ,பலவீனமோ
உன்னால் வகுக்கப்பட்டதே !
உனக்கான எல்லாம்
உன்னால் உருவானதே !
விடியும் வரை விழித்திரு - முடியாவிடில்
விடியும் வரை விழித்திரு - முடியாவிடில்
உறங்குவதை நிறுத்திடு . . .

1 comment:
Nalla irundhadhu praba
Post a Comment