
காலை இடரும் வழிக்கல்,
கடந்து செல்லும் வாகனம்
காதில் ஒலிக்கும் ஒலிப்பான்
பாடி செல்லும் பறவை - அதை
பார்த்து ரசிக்கும் மழலை
கூவி செல்லும் பூக்கூடை -
உள்ளே
குவிந்து கிடக்கும் வாசனை
ஒற்றையாய் நிற்கும் ஒளிகம்பம் -
அதில்
ஓடி விளையாடும் ஊர்க்குருவி
அழுது தேம்பும் பள்ளிப்பிள்ளை - அவனை
அடிக்க ஓங்கும் தாயின்கை
ஜீன்ஸில் மினுக்கும் சிவந்த பெண் -
அவளை
ஜாடையில் ரசிக்கும் சாலை பையன்
இதில் எதையும் ரசிக்கமுடியவில்லை ..................
கையில் ஸ்மார்ட்போன் (Smartphone)
No comments:
Post a Comment